ஓட்டுபோட மூதாட்டிக்கு பணம் கொடுத்தவர் மீது வழக்கு

திட்டக்குடி:திட்டக்குடியில் ஓட்டு போட மூதாட்டிக்கு பணம் கொடுத்தவர் மீது, வி.ஏ.ஓ., போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

கடலுார் மாவட்டம், திட்டக்குடி நகராட்சி, தி.இளமங்கலம், அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் கைலாசம் மனைவி தனலட்சுமி, 87. இவர் 85 வயதுக்கு மேற்பட்டோர் என்ற அடிப்படையில் நேற்று பகல் 12:30 மணியளவி்ல் இவரிடம் மண்டல அலுவலர் வீரமணி தலைமையிலான அலுவலர்கள் ஈடுபட்டனர்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த கொளஞ்சி என்பவர் மூதாட்டி தனலட்சுமியிடம் உதய சூரியன் சின்னத்தில் ஓட்டு போடுவதற்கு பணம் கொடுத்தது தெரிந்தது. இதுகுறித்து, வி.ஏ.ஓ., சத்தியராஜ் கொடுத்த புகாரின்பேரில், கொளஞ்சி மீது திட்டக்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். ஓட்டுக்கு பணம் கொடுத்த இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement