தி.மு.க., வேட்பாளர்களின் வெற்றி ;நிர்வாகிகளிடம் திருமாவளவன் வேண்டுகோள்
பரங்கிப்பேட்டை: புவனகிரி தொகுதி தி.மு.க., வேட்பாளர் சரவணனை ஆதரித்து நேற்று சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டில், வி.சி.க., தலைவர் திருமாவளவன் ஓட்டு சேகரித்தார்.
அப்போது, அவர் பேசியதாவது:
வி.சி.க., போட்டியிடும் காட்டுமன்னார்கோவில், பண்ருட்டி தொகுதிகளில், தி.மு.க., நிர்வாகிகள் தீவிரமாக தேர்தல் பணி செய்கிறார்கள்.அதுபோல், தி.மு.க., போட்டியிடும் தொகுதிகளில் வி.சி.க., நிர்வாகிகள் தீவிரமாக களப்பணியாற்ற வேண்டும்.
புவனகிரி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் சரவணனை, அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய நீங்கள் கடுமையாக ஒழைக்க வேண்டும்.
விசில், அடிப்பவர்களை தியேட்டருக்கு அனுப்புங்கள், சட்டசபைக்கு வேண்டாம். நடிகர் விஜய்க்கு போடும் ஓவ்வொரு ஓட்டும், பிரதமர் மோடிக்கு போட்டதாக தான் பொருள். இரட்டை இலைக்கு போட்டாலும் அது மோடிக்கு போடுவதாக தான் பொருள். இரட்டை இலை அ.தி.மு.க., சின்னம் கிடையாது. தமிழகத்தில், பா.ஜ., விற்கு, இரண்டு சின்னங்கள் உள்ளன. ஒன்று, பா.ம.க., சின்னம், இரண்டாவது அ.தி.மு.க., இரட்டை இலை சின்னம்.
இவ்வாறு, திருமாவளவன் பேசினார்.
அவருடன், புவனகிரி தொகுதி தி.மு.க., வேட்பாளர் சரவணன், கடலுார் கிழக்கு மாவட்ட பொருளாளர் கதிரவன், வி.சி.க., மாவட்ட செயலாளர் அரங்க தமிழ்ஒளி, மண்டல செயலாளர் செல்லப்பன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மேலும்
-
பண்டிப்பூர் வனப்பகுதி சுரங்கப்பாதை திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு
-
நசீர் அகமதுவுடன் ஜமீர் சந்திப்பு காங்கிரசிலிருந்து வெளியேற திட்டம்?
-
பெண் ஊழியர்களின் மாதவிடாய் விடுப்பு மாநில அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
-
பிரதமர் மோடியிடம் முதல்வர் வழங்கிய 18 கோரிக்கை மனு
-
தாய்க்கு பணிவிடை செய்ய முடியவில்லை மாடியிலிருந்து தள்ளி கொலை செய்த மகன்
-
கிரைம் கார்னர்