கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் வி.சி., வேட்பாளருக்கு வரவேற்பு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தனி தொகுதி வி.சி., வேட்பாளர் மாலதி, கள்ளக்குறிச்சி ஒன்றிய பகுதியான வீரசோழபுரம், மாடூர், வி.பாளையம், பெருவங்கூர், ரோடுமாமந்துார், க.மாமனந்தல், தச்சூர், பொற்படாக்குறிச்சி உட்பட பல்வேறு கிராமங்களில் கூட்டணி கட்சியினருடன் ஓட்டு சேகரித்தார். அப்போது வேட்பாளர் மாலதிக்கு கிராம மக்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது வேட்பாளர் பேசுகையில்; தி.மு.க., தலைவர் ஸ்டாலின், திராவிட மாடல் 2.0 வாக்குறுதிகளாக குடும்பங்கள் செழிக்கும் வகையில் 8 ஆயிரம் இல்லதரசி கூப்பன், 10 லட்சம் வரை மருத்துவ காப்பீடு, ரூ.2 ஆயிரம் மகளிர் உரிமைத் தொகை, நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு விலை ரூ.3,500, கரும்பு டன்னுக்கு ரூ. 4,500 ஆக உயர்வு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அளித்துள்ளார். இந்த திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்த மீண்டும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக்கு பானை சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என கூறினார்.
தெற்கு மாவட்ட அவைத் தலைவர் ராமமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் முருகன், மாவட்ட துணை செயலாளர் காமராஜ், வி.சி., மதியழகன், ஊராட்சி தலைவர் ஜெயசங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
பண்டிப்பூர் வனப்பகுதி சுரங்கப்பாதை திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு
-
நசீர் அகமதுவுடன் ஜமீர் சந்திப்பு காங்கிரசிலிருந்து வெளியேற திட்டம்?
-
பெண் ஊழியர்களின் மாதவிடாய் விடுப்பு மாநில அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
-
பிரதமர் மோடியிடம் முதல்வர் வழங்கிய 18 கோரிக்கை மனு
-
தாய்க்கு பணிவிடை செய்ய முடியவில்லை மாடியிலிருந்து தள்ளி கொலை செய்த மகன்
-
கிரைம் கார்னர்