சட்டப்பணிகள் ஆணைக்குழுதன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை:சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் இயங்கும் தேவகோட்டை, காரைக்குடி, திருப்புத்துார், மானாமதுரை, இளையான்குடி, சிங்கம்புணரி மற்றும் திருப்புவனம் வட்ட சட்டப்பணிகள் குழுக்களுக்கு கீழ் சட்ட உதவி மற்றும் சட்ட அறிவை எடுத்துரைப்பதற்காக சமூகசேவை மனப்பான்மையுடன் பணிபுரிய தன்னார்வலர்கள் தேர்தெடுக்கப்பட உள்ளனர்.

இதற்கு சமூகசேவை புரியும் சமூக ஆர்வலர்கள் ( அரசியல் அமைப்பு சாராத தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் ) உளவியல் அல்லது பிற தொடர்புடைய துறைகளை சேர்ந்தவர்கள் ஊதியமின்றி பணிபுரிவதற்கு விண்ணப்பிக்கலாம். ஏப்.30க்குள் விண்ணப்பங்களை இணையதளமுகவரி https://district.ecourts.gov.in/sivagangai என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து பாஸ்போர்ட் புகைப்படத்துடன் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

Advertisement