பா.ஜ.,வினரை கொல்ல முயன்ற 10 மா.கம்யூ., நிர்வாகிகளுக்கு 25 ஆண்டு சிறை தண்டைனை
கண்ணுார்:கேரளாவில், பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மீது குண்டு வீசி கொல்ல முயன்ற வழக்கில் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த 10 பேருக்கு தலா 25 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கேரளாவின் கண்ணுார் பகுதியில் கடந்த 2011ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ்., கிளை அமைப்பது தொடர்பாக அந்த அமைப்பினருக்கும் அப்பகுதி மார்க்சிஸ்ட் கட்சியினருக்கும் முன்விரோதம் இருந்தது.
இந்நிலையில் அந்த ஆண்டு நவ.,27ல் ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ., நிர்வாகிகள் 30 பேரை ஏற்றி சென்ற வாகனம் மீது மார்க்சிஸ்ட் கம்யூ.,கட்சியினர் வெடிகுண்டுகளை வீசி கொல்ல முயன்றனர். இதில் ஆர்.எஸ்.எஸ்.,நிர்வாகிகள் ஒன்பது பேர் படுகாயம் அடைந்தனர்.
இது தொடர்பான வழக்கு கண்ணுார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கை விசாரித்த கூடுதல் நீதிபதி பிரசாந்த், மார்க்சிஸ்ட் தொண்டர்கள் 10 பேருக்கும் தலா 25 ஆண்டு சிறை தண்டனை விதித்து நேற்று உத்தரவிட்டார்.
மேலும்
-
அனைத்து ஊராட்சிகளிலும் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்படும்: கார்த்திக் தண்டபாணி
-
அடுக்குமாடி குடியிருப்பு மக்களுக்காக 'செல்பேசி' செயலி: பாலு வாக்குறுதி
-
கோவில் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்: பக்தர்கள் அவதி
-
வரும் 1ல் 'மெட்ரோ' பயணியர் அட்டை சிங்கார சென்னை அட்டைக்கு மாற்றம்
-
வாக்குறுதிகளை தாமதமின்றி நிறைவேற்றுவேன்: ஐ.ஜே.கே.,வேட்பாளர் வெங்கடேசன் உறுதி
-
தொகுதி வளர்ச்சியை பார்த்து மக்கள் என்னை வெற்றி பெற செய்வார்கள்: காங்., வேட்பாளர் ஹசன் மவுலானா பிரசாரம்