மகளிர் இட ஒதுக்கீட்டை நிறைவேற்றியே தீருவோம்; நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உறுதி
புதுடில்லி : ''மகளிர் இட ஒதுக்கீட்டை நிறைவேற்றியே தீருவோம். அதை எதிர்க்கும் கட்சிகளின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது,'' என்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
மகளிர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான, 131வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு, லோக்சபாவில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு கிடைக்காததால் தோல்வி அடைந்தது. பெரும்பான்மைக்கு 352 எம்.பி.,க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், மசோதாவுக்கு ஆதரவாக 298; எதிராக 230 எம்.பி.,க்கள் ஓட்டளித்தனர் .
இந்நிலையில் பிரதமர் மோடி டிவி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
சுயநலம்
பிரதமர் மோடி ஆற்றிய உரை: மகளிர் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற கனவை எதிர்க்கட்சிகள் தகர்த்துள்ளன. பெண்களின் பல ஆண்டு கனவுக்கு முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது. கட்சி நலன், மற்ற எந்த நலனை விடவும் தேச நலனே முக்கியம். மகளிர் இடஒதுக்கீடு மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்படாததற்கு பெண்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
@twitter@https://x.com/dinamalarweb/status/2045519839675232738
twitter
திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி போன்ற கட்சிகளின் சுயநலத்தால் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட முடியாமல் போனது.
தண்டனை
மகளிர் இடஒதுக்கீடு மசோதா தடுத்து நிறுத்தப்பட்டதை எதிர்க்கட்சியினர் கொண்டாடினர். கை தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இந்த 21ம் நூற்றாண்டில் நடக்கும் அனைத்தையும் பெண்கள் கவனித்து கொண்டு இருக்கிறார்கள்.
@twitter@https://x.com/dinamalarweb/status/2045520625301963254
twitter
@block_B@பெண்கள் எல்லாவற்றையும் மன்னிப்பார்கள். தாங்கள் அவமானபடுத்தப்பட்டதை மன்னிக்கவே மாட்டார்கள். மசோதா தோற்கடிக்கப்பட்டதன் விளைவுகளை திமுக, காங்கிரஸ் எதிர்காலத்தில் சந்திக்கும். எதிர்க்கட்சிகளின் செயலை நாட்டு மக்கள் கூர்ந்து கவனித்து கொண்டு உள்ளனர். இந்த மசோதாவை தடுத்த பாவத்திற்கு தண்டனை நிச்சயம் கிடைக்கும். block_B
@twitter@https://x.com/dinamalarweb/status/2045524772419940470
twitter
முறியடிப்பு
மகளிர் இட ஒதுக்கீடு யாரின் உரிமையையும் பறிப்பது கிடையாது. இந்த மசோதா பெண்களுக்கான அதிகாரத்தை அளிக்கும். அடுத்து வரும் லோக்சபா தேர்தலிலேயே அதை நிறைவேற்ற நினைத்தோம்.
நாட்டின் வளர்ச்சி பயணத்தில் பெண்களையும் அழைத்து செல்ல முயன்றோம். அனைத்து மாநிலங்களிலும் உள்ள பெண்களுக்கு சம உரிமை வழங்கும் நடவடிக்கை. இந்த மிகப்பெரிய முயற்சியை காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் முறியடித்தன.
உண்மை முகம்
மத்திய அரசின் பெரிய முயற்சியை எதிர்க்கட்சிகள் கூட்டாக படுகொலை செய்தனர். காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகள் இந்த கொலைக்கு காரணம். பெண்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் செய்த மிகப்பெரிய சதி இது. மசோதா குறித்து ஒன்றன் பின் ஒன்றாக பல பொய்களை பரப்பினர். இதன் மூலம் எதிர்க்கட்சிகளின் உண்மை முகம் வெளியே வந்துள்ளது.
@block_Y@காங்கிரஸ் இதுவரை செய்த பாவங்களுக்கு பரிகாரம் தேடவில்லை. வரலாற்று சிறப்பு மக்க மசோதாவை இயற்றும் வாய்ப்பை காங்கிரஸ் இழந்துள்ளது. இந்த மசோதாவை காங்கிரஸ் ஆதரிக்கும் என எதிர்பார்த்தேன்.மாநில கட்சிகளின் தோளில் சவாரி செய்து காங்கிரஸ் இன்னும் உயிர்வாழ்கிறது.block_Y
பாவம்
மகளிர் மசோதா குறித்து எதிர்க்கட்சிகள் குறை மட்டுமே சொல்லி வந்தன. எதிர்க்கட்சிகளின் மோசமான அரசியலை நாட்டு மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். மகளிருக்கு அதிகாரம் கிடைத்தால் வாரிசு அரசியல் முடிவுக்கு வரும் என அஞ்சுகின்றனர். நாட்டு மக்களுக்கு சேவை செய்ய பெண்கள் விரும்புகின்றனர். குடும்ப அரசியல் செய்வோரால் மகளிரின் ஆசை நிறைவேறுவது இல்லை. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் இந்த பாவத்தை மக்கள் மறக்க மாட்டார்கள்.
தவறான முடிவு
தொகுதி மறுவரையறை பற்றி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பொய் பேசுகின்றனர். தொகுதி மறுசீரமைப்பால் மாநிலங்கள் பாதிக்கப்படும் என வதந்தி பரப்பினர். அனைத்து மாநிலங்களுக்கும் தொகுதிகள் சமமான வகையில் தான் அதிகரிக்கும். தமிழகம், மேற்கு வங்கம், உபி, கேரளம் என அனைத்து மாநிலங்களும் இதில் பலன் பெறும்.
@block_P@தமிழக எம்பி, எம்எல்ஏக்களின் எண்ணிக்கை உயரும் வாய்ப்பை திமுக தடுத்துவிட்டது. திரிணமுல் காங்கிரஸ், சமாஜ்வாதியும் இதே தவறை செய்துவிட்டன. திமுகவின் தவறான முடிவால் தமிழகத்திற்கான வாய்ப்பு பறிபோயுள்ளது.
block_P
தடை
சீர்திருத்தங்களுக்கு எதிரான கட்சி காங்கிரஸ். எதில் எல்லாம் சீர்திருத்தம் வருகிறதோ அதை எல்லாம் எதிர்ப்பது காங்கிரசின் திட்டம். ஜன்தன், ஆதார் திட்டங்களை எதிர்த்தது. டிஜிட்டல் பண பரிவர்த்தனையையும் எதிர்த்தது. காஷ்மீர் சிறப்பு சட்டம் நீக்கம், முத்தலாக் சட்டம் ஆகியவற்றையும் எதிர்த்தது. எஸ்ஐஆர் நடைமுறையை காங்கிரஸ் எதிர்க்கிறது. நக்சலைட்களை ஒழிப்பதில் காங்கிரஸ் தடையாக இருந்தது.
@twitter@https://x.com/dinamalarweb/status/2045528527005684085
twitter
@block_G@காங்கிரஸ் எதிர்மறை வழியில் பயணிப்பதை வரலாறு பதிவு செய்துள்ளது. நம்முடன் சுதந்திரம் பெற்ற பல நாடுகள் நம்மை விட பல மடங்கு முன்னேறிவிட்டன. நாட்டின் முன்னேற்றத்தில் தடை விதித்ததே காங்கிரசின் பிரதான சாதனை. ஒரே ரேங்க் ஒரே பென்சன், ஓபிசி இட ஒதுக்கீடு திட்டத்தையும் எதிர்த்தது. ஒவ்வொரு நலத்திட்டத்தையும் தொடர்ந்து எதிர்த்துள்ளது.
block_G
பாடம்
காங்கிரசுக்கு எதிரான இந்த போர் வெறும் ஒரு சட்ட மசோதாவுக்கு எதிரானது அல்ல. காங்கிரசின் இந்த நடவடிக்கைக்கு நாட்டு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.இந்த மசோதா நிறைவேற்றுவதில் எனக்கு எந்த பெருமையும் வேண்டாம். இதற்கான பெருமையை எதிர்க்கட்சிகளுக்கு எழுதி கொடுக்க தயாராக இருந்தேன். இந்த மசோதா நிறைவேறாததில் நாடே துக்கத்தில் உள்ளது. நானும் துக்கம் அடைந்துள்ளேன்.
உறுதி
நாட்டின் 100 சதவீத பெண்களின் ஆசிர்வாதம் எங்கள் பக்கம் உள்ளது. மகளிர் இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் கட்சிகளின் எண்ணம் ஒரு போதும் நிறைவேறாது. நேற்று எங்களிடம் எம்பிக்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. அதனால், நாங்கள் தோற்றுவிட்டதாக அர்த்தம் இல்லை.
மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்ற உறுதியாக உள்ளோம். நாட்டின் வளர்ச்சிக்காக இதை செயல்படுத்தியே தீருவோம். மகளிர் இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் கட்சிகளின் எண்ணம் நிறைவேறாது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
நாக்கிலே நேர்மை இருந்தால்,இப்ப செஞ்ச மாதிரி பாலில் விஷத்தை கலந்து மட்டும் பரிமாற வேண்டாம்.நீங்கள் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவுடன் கலந்து கொடுத்த,மறுவரையறை என்ற விஷத்தை தான் வேண்டாம் என்கிறார்கள்.தைரியம் இருந்தால் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை மட்டும் தனியாக கொண்டு வந்து உமது நேர்மையை நிரூபிக்க முடியுமா?
உண்மையை மறைத்து பேசுகிறார் பிரதமர். இது வெறும் பெண்களுக்கான மசோதா மட்டுமல்ல, தொகுதி வரையறை என்ற மசோதாவும் இதனுள் ஒளிந்துகொடுள்ளது. ஆகவே அவர்களால் இதை நிறைவேற்றமுடியவில்லை. உண்மையில் தேர்தல் நடந்து கொண்டுள்ள இன்றைய தேதியில் இது எதிக்கட்சிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும். பிஜேபி நினைத்தது ஒன்று, ஆனால் நடந்தது வேறொன்று.
நாட்டில் உள்ள அனைத்து பெண்களும் பாராளுமன்ற உறுப்பினர்களாக ஆக்க பாடுபட்டது போல பேசுகிறார்.
பிரதமர் மக்கள் நலனுக்காக ஒரு திட்டத்தை கொண்டு வந்தால் அதை கண்மூடித்தனமாக எதிர்ப்பது எந்த விதத்தில் சரி. 50 ஆண்டுகளாக செயல்படுத்தாமல் தள்ளி போட்டு கொண்டே போன தொகுதி சீரமைப்பை செயல்படுத்தினால் யாருக்கு என்ன நஷ்டம்.
தமிழ் நாடு 39 ல் இருந்து 59 ஆக உயர்வு. 50 சதவீதம் உயர்வு அதில் 33 சதவீதம் பெண்களுக்கு, இதில் என்ன தவறு? திரு. ஸ்டாலினுக்கு இதுல என்ன இழப்பு. மோடிஜிக்கு பேர் போக கூடாது என்பது தானே. மக்களுக்கான பிரதமர், மக்களுக்காக கொண்டு வந்த திட்டத்தை, எதிர்கட்சிகள் நிறுத்திய விசயத்தை மக்களிடத்தில் அம்பலபடுத்தும் உரிமை அவருக்கு உண்டு.
பிரதமர் படித்த ஆல் பொலிட்டிகல் சைன்ஸ் அறிவு இப்படி பேச வைக்குது.
இந்திய அரசியலமைப்பின் உயர்ந்த பதவிவகிப்பவரின் சொல்லில் ஒரு நியாயத் தன்மை வேண்டும். தங்கள் நிறைவேற்ற நினைப்பதை நேரடியாக மக்களிடம் கூற முடியவில்லை என்றால் எதற்கு பதவியில் நீடிக்கவேண்டும்? இதனை தட்டிக் கேட்பதற்கு யாரும் இல்லை என்ற தைரியத்தில் தானே? வோட்டு போட்டு தேர்தெடுத்த மக்களை முட்டாளாக்குவது ஒரு பிரதமருக்கு அழகில்லை. அனைத்து மக்களும் ஓன்று சேர்ந்து அரசிலமைப்பை பாதுகாக்க உருவாக்கப்பட்ட நீதிமன்றத்தை நாட வேண்டும்.
இல்லை இல்லை நீதிமன்றமமே தானாக முன்வந்து மக்களுக்காக இதை தட்டி கேட்க வேண்டும். இல்லையேல் நீதிமன்றத்தின்மேல் மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விடும். நீதியரசருக்கு இது தானாக தோன்றாவிட்டால், அவர்கள் நீதிஅரசர்களாக இருக்க தகுதியற்றவர்கள்
உலக மஹா நடிப்பு சாமி... உங்களுக்கு பழகிடுச்சு... ஆனா எங்களுக்கு பயமா இருக்கு உங்க சானக்கிய தனம்
இது அறிவார்த்த குடி . உம்மோட எமோஷனல் தூண்டல் எல்லாம் இங்க எடுபடாது . அது உன் ஊர்ல தான் வேலை செய்யும் . இங்க என்ன கதறினாலும் வேலைக்கு ஆகாது.
அல்லக்கைகள் அலறுவதை பார்த்தால், மோடிஜி ஒரு குறிப்பிட்ட சதவீத பெண்கள் ஆதரவை பெற்று விட்டதாகவே தெரிகிறது
எலக்ஷன் கமிஷன் இது போன்ற தவறான முன்னுதாரணங்களுக்கு இடம் கொடுத்தால் எலக்சன் கமிஷன் மீது உள்ள நம்பிக்கை பகுத்தறிவுள்ள படிப்பறிவு உள்ள மக்களுக்கு எலெக்ஷன் கமிஷன் மீது நம்பிக்கை போய்விடும் இவரை இன்று பேச அனுமதித்தது பெரிய வரலாற்றுப் பிழை ஏனென்றால் இவர் கூறும் காரணங்கள் காங்கிரஸ் திமுக சமாஜ்வாடி திருமலு காங்கிரஸ் பதவி தான் சுட்டிக்காட்டுகிறார் எலக்சன் நடப்பது எங்கே திமுக ஆளும் தமிழ்நாடு திருநாமள் காங்கிரஸ் மேற்குவங்கம் ஏன் அவர்கள் மீது குறை கூறினீர்கள் உங்களுக்கு ஓட்டு வேண்டும் பிரதமர் பதவிக்கு ஒரு மரியாதை இருக்கிறது அதை காப்பாற்றி கொடுங்கள் ஐயா மோடி அவர்களேமேலும்
-
அடுக்குமாடி குடியிருப்பு மக்களுக்காக 'செல்பேசி' செயலி: பாலு வாக்குறுதி
-
கோவில் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்: பக்தர்கள் அவதி
-
வரும் 1ல் 'மெட்ரோ' பயணியர் அட்டை சிங்கார சென்னை அட்டைக்கு மாற்றம்
-
வாக்குறுதிகளை தாமதமின்றி நிறைவேற்றுவேன்: ஐ.ஜே.கே.,வேட்பாளர் வெங்கடேசன் உறுதி
-
தொகுதி வளர்ச்சியை பார்த்து மக்கள் என்னை வெற்றி பெற செய்வார்கள்: காங்., வேட்பாளர் ஹசன் மவுலானா பிரசாரம்
-
தொகுதி வளர்ச்சிக்கு மீண்டும் என்னை வெற்றி பெற செய்யுங்கள்: செந்தமிழன்