வர்த்தக ஒப்பந்த பேச்சு நடத்துவதற்கு அமெரிக்கா செல்கிறது இந்திய குழு
புதுடில்லி : இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுக்காக, அதிகாரிகள் குழு அடுத்த வாரம் வாஷிங்டன் செல்ல உள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.
மார்ச் மாதத்திலேயே கையெழுத்தாக திட்டமிடப்பட்டிருந்த இந்த ஒப்பந்தம், இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பொருட்கள் மீது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்து இருந்த பரஸ்பர வரி விதிப்பு செல்லாது என்ற அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் தாமதமாகியுள்ளது.
முன்னதாக பிப்ரவரி மாதத்தில், இரு நாடுகளும் முதல் கட்ட வர்த்தக ஒப்பந்தத்திற்கான வடிவமைப்பை அறிவித்தன.
அதன்படி, அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு விதிக்கும் சுங்க வரியை 18 சதவீதமாக குறைக்க ஒப்புக்கொண்டிருந்தது.
ஆனால், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின், அதிபர் டிரம்ப், பிப்., 24ம் தேதி துவங்கி 150 நாட்களுக்கு அனைத்து நாடுகளின் பொருட்களுக்கும் 10 சதவீத கூடுதல் வரி விதித்துள்ளார். இதன் காரணமாக, இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக பேச்சு கடந்த மாதம் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், ஒப்பந்தம் குறித்து பேச இந்திய அதிகாரிகள் குழு அமெரிக்கா செல்ல உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த வாரம் நடைபெறவுள்ள இந்திய - அமெரிக்க பேச்சுவார்த்தை, இருதரப்பு வர்த்தக உறவில் முக்கிய திருப்பமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும்
-
பண்டிப்பூர் வனப்பகுதி சுரங்கப்பாதை திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு
-
நசீர் அகமதுவுடன் ஜமீர் சந்திப்பு காங்கிரசிலிருந்து வெளியேற திட்டம்?
-
பெண் ஊழியர்களின் மாதவிடாய் விடுப்பு மாநில அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
-
பிரதமர் மோடியிடம் முதல்வர் வழங்கிய 18 கோரிக்கை மனு
-
தாய்க்கு பணிவிடை செய்ய முடியவில்லை மாடியிலிருந்து தள்ளி கொலை செய்த மகன்
-
கிரைம் கார்னர்