குறைந்து வரும் வங்கி டிபாசிட் அதிகரிக்க ஆர்.பி.ஐ., ஆலோசனை
மும்பை: அதிகளவில் டிபாசிட் ஈர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து வங்கிகளுடன் ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருகிறது.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் நேற்று கூறியதாவது:
கடந்த சில ஆண்டுகளாக, வங்கி கணக்குகளில் இருந்த டிபாசிட் சேமிப்புகள் பங்குச்சந்தை மற்றும் மியூச்சுவல் பண்டுகளுக்கு மாறி வருகின்றன. வட்டி வருவாயை விட கூடுதல் வருமானம் கிடைப்பது இதற்கான முக்கிய காரணம்.
இந்த மாற்றம் காரணமாக, வங்கிகளுக்கு கிடைக்கும் நிதி குறைந்து, அவற்றின் கடன் வழங்கும் திறன் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக ஆர்.பி.ஐ., கவலை தெரிவித்துள்ளது. இதனால், சில வங்கிகள் தங்களது கடன் பாக்கியை விற்பனை செய்து, 'கடன் - டிபாசிட் விகிதத்தை' சீர்செய்ய முயற்சி செய்து வருகின்றன.
இந்த நிலை நீடித்தால், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த சூழலில், நிலையான, அதிக நம்பகத்தன்மை கொண்ட டிபாசிட் முதலீட்டு முறையை ஊக்குவிப்பதற்கான வழிமுறைகள் குறித்து, வங்கிகளுடன் ரிசர்வ் வங்கி ஆலோசனை நடத்தி வருகிறது.
சமீப வாரங்களில் நடைபெற்ற ஆலோசனைகளில், நிதி சந்தைகளில் அதிகரித்துள்ள முதலீடு காரணமாக, டிபாசிட்களின் தன்மை மாறி வருவதாக ஆர்.பி.ஐ. அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு தகவலறிந்த வட்டாரங்கள் கூறின.
மேலும்
-
பண்டிப்பூர் வனப்பகுதி சுரங்கப்பாதை திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு
-
நசீர் அகமதுவுடன் ஜமீர் சந்திப்பு காங்கிரசிலிருந்து வெளியேற திட்டம்?
-
பெண் ஊழியர்களின் மாதவிடாய் விடுப்பு மாநில அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
-
பிரதமர் மோடியிடம் முதல்வர் வழங்கிய 18 கோரிக்கை மனு
-
தாய்க்கு பணிவிடை செய்ய முடியவில்லை மாடியிலிருந்து தள்ளி கொலை செய்த மகன்
-
கிரைம் கார்னர்