விமான நிறுவனங்களுக்கு வங்கிக்கடன் ரூ.4,000 கோடியில் உத்தரவாத திட்டம்
புதுடில்லி, ஏப். 16-
ஈரான் போரால் பாதிக்கப்பட்டுள்ள விமான நிறுவனங்களுக்கு, அவசர கடன் உத்தரவாதம் அளிக்கும் திட்டத்துக்காக, மத்திய அரசு 4,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய உள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:
ஈரான் போர் காரணமாக ஏற்பட்டுள்ள செயல்பாட்டு சிக்கல்களை சமாளிக்க, விமான போக்குவரத்து நிறுவனங்களுக்கு கிட்டத்தட்ட 4,000 கோடி ரூபாய் மதிப்பிலான அவசர கடன் உத்தரவாதம் அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு விமான நிறுவனமும் 1,000 கோடி ரூபாய் வரை கடன் பெற மத்திய அரசு உத்தரவாதம் வழங்கும். மேலும், நிறுவன உரிமையாளர்கள் அதே அளவு முதலீடு செய்தால், கூடுதலாக 500 கோடி ரூபாய் வரை கடன் பெறும் வசதியும் வழங்கப்படும்.
மேற்காசிய போரால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு துறைகளை சேர்ந்த நிறுவனங்களுக்கு ஆதரவு அளிப்பதற்காக, கிட்டத்தட்ட 2.50 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களுக்கு உத்தரவாதம் வழங்கும் மத்திய அரசு திட்டத்தின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை அமைந்துள்ளது.
விமான போக்குவரத்து நிறுவனங்களுக்கு அரசு வழங்கும் உத்தரவாதம் என்பது, கடன் பெறுவதை எளிதாக்குவதற்கான ஒரு வாய்ப்பே தவிர, கடன் ஒப்பந்த நிபந்தனைகளை வங்கிகளுடன் நிறுவனங்களே தனிப்பட்ட முறையில் இறுதி செய்ய வேண்டும்.
கடன் வழங்குவதற்கு முன் வங்கிகளும் இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும்.
இவ்வாறு தகவலறிந்த வட்டாரங்கள் கூறின.
கடந்த சில ஆண்டுகளில், 'ஜெட் ஏர்வேஸ்', 'கோ ஃபர்ஸ்ட்' போன்ற விமான நிறுவனங்கள் திவாலாகி விட்டதால், விமான துறைக்கு கடன் வழங்குவதில் வங்கிகள் மிகுந்த எச்சரிக்கையாக உள்ள சூழலில் கடன் உத்தரவாத திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
@block_B@ 'பலன் பெறும் ஸ்பைஸ்ஜெட்' நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் மத்திய அரசின் கடன் உத்தரவாத திட்டத்தால், அதிக பலன் அடையும் என்று துறை நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நிறுவனம் 2024ல் 3,000 கோடி ரூபாய் திரட்டியிருந்தாலும், தற்போது ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சிலர் சம்பளமின்றி விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர்.block_B
மேலும்
-
பண்டிப்பூர் வனப்பகுதி சுரங்கப்பாதை திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு
-
நசீர் அகமதுவுடன் ஜமீர் சந்திப்பு காங்கிரசிலிருந்து வெளியேற திட்டம்?
-
பெண் ஊழியர்களின் மாதவிடாய் விடுப்பு மாநில அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
-
பிரதமர் மோடியிடம் முதல்வர் வழங்கிய 18 கோரிக்கை மனு
-
தாய்க்கு பணிவிடை செய்ய முடியவில்லை மாடியிலிருந்து தள்ளி கொலை செய்த மகன்
-
கிரைம் கார்னர்