எலுமிச்சம் பழம் விலை 'கிடுகிடு' 1 கிலோ 170 ரூபாயாக அதிகரிப்பு
சென்னை, எலுமிச்சை விலை கிலோ 170 ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும், விளைச்சல் குறைவால் மேலும் விலை உயர வாய்ப்புள்ளதாகவும் தென்காசி மாவட்டம், புளியங்குடி எலுமிச்சை சந்தை வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து சங்கத்தின் உறுப்பினர் சையது முகமது கூறியதாவது:
பொதுவாக கோடை காலத்தில் எலுமிச்சை வரத்து அதிகமாக இருக்கும். இந்தாண்டு விளைச்சல் பெருமளவில் குறைந்துள்ளது. 40 டன் வரத்து எதிர் பார்க்கப்பட்ட நிலையில், 20 டன் மட்டுமே வரத்து உள்ளது. இதனால் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.
கடந்த மாதம் 1 கிலோ எலுமிச்சை 90 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், தற்போது 170 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஜூன் 15ம் தேதி வரை எலுமிச்சை சீசன் இருக்கும்.
விளைச்சல் குறைந்து காணப்படுவதால், மேலும் விலை உயரவே வாய்ப்உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
எலுமிச்சை விலை
கடந்த மாதம்
ரூ.90
தற்போது
ரூ.170
வரத்து
50 சதவீதம் குறைவு
சீசன்
ஜூன் 15ம் தேதி வரை
@block_B@ தென்காசி மாவட்டம் புளியங்குடி, சிவகிரி, கடையநல்லுார், வாசுதேவநல்லுார், சிங்கிலிபட்டி, சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 20,000 ஏக்கருக்கும் மேல் எலுமிச்சை சாகுபடி செய்யப்படுகிறது. போதுமான மழை இல்லாததால் எலுமிச்சை விளைச்சல் குறைந்துள்ளது. - அந்தோணிசாமி, எலுமிச்சை விவசாயிblock_B
மேலும்
-
உலகில் செல்வாக்கு மிகுந்த 100 பேர்: டைம் இதழ் பட்டியலில் இந்தியர்கள் யார் யார்?
-
தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு: கருப்புக்கொடி ஏற்றி முதல்வர் ஸ்டாலின் போராட்டம்
-
ஓசையின்றி குடிநீர் கட்டணம் உயர்வு; வீட்டு உரிமையாளர்கள் புகார்
-
தேர்தலுக்கு 7 நாட்கள் தான்; அரசியல் கள பரபரப்பு செய்திகளுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
விஜய்க்கு கூடிய கூட்டம் ஓட்டாக மாறுமா?
-
மாநிலத்தில் அவிநாசி முன்மாதிரி தொகுதியாகும்; பா.ஜ. வேட்பாளர் முருகன் பிரத்யேகப் பேட்டி