சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பில் 93.70 சதவீதம் பேர் தேர்ச்சி 2வது இடத்தில் சென்னை மண்டலம்
சென்னை: மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., நேற்று மாலை வெளியிட்ட, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளின்படி, 93.70 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் பயிலும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள், கடந்த பிப்., 17 முதல் மார்ச் 11 வரை நடந்தன. இதில், மொத்தம் 25 லட்சத்து 8,319 பேர் தேர்வு எழுதினர்.
இந்நிலையில், நேற்று தேர்வு முடிவுகள் வெளியாயின. அதன்படி, தேர்ச்சி சதவீதம் 93.70 ஆக அறிவிக்கப்பட்டது.
தேர்ச்சி சதவீதத்தில் மாணவர்களை விட, மாணவியர் முன்னிலை வகிக்கின்றனர். அதன்படி, 94.99 சதவீத தேர்ச்சியை மாணவியரும், 92.6 சதவீத தேர்ச்சியை மாணவர்களும் பதிவு செய்துள்ளனர்.
மாணவர்களிடம் ஆரோக்கியமற்ற கல்வி போட்டியை தவிர்க்கும் வகையில், முதலிடம் பிடித்தவர்களின் பட்டியல் வெளியிடப்படவில்லை. அதனால், இரண்டாம், மூன்றாம் இடங்கள் குறித்த தகவல்களும் வெளியாகவில்லை.
சமீப காலமாக, சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வுகளில் தென் மாநிலங்களின் மண்டலங்கள் அதிக தேர்ச்சி சதவீதத்தை பெற்று, முன்னிலை வகிக்கின்றன. இந்தாண்டும், தென் மாநிலங்கள் சாதித்துள்ளன. அதன்படி, திருவனந்தபுரம் மற்றும் விஜயவாடா மண்டலங்கள் தலா, 99.79 சதவீத தேர்ச்சியுடன், முதலிடத்தை பிடித்துள்ளன.
அதை தொடர்ந்து, 99.58 சதவீத தேர்ச்சியுடன், சென்னை மண்டலம் இரண்டாமிடத்தை பிடித்துள்ளது.
இந்தாண்டு முதல், புதிய கல்வி கொள்கையை பின்பற்றி, ஆண்டுக்கு இரண்டு பொதுத் தேர்வுகளை சி.பி.எஸ்.இ., நடத்துகிறது.
அதன்படி, வரும் மே, - ஜூன் மாதங்களில், மொழிப்பாடங்கள் தவிர்த்த மூன்று பாடங்களுக்கு, இரண்டாம் பொதுத்தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.
மேலும்
-
பண்டிப்பூர் வனப்பகுதி சுரங்கப்பாதை திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு
-
நசீர் அகமதுவுடன் ஜமீர் சந்திப்பு காங்கிரசிலிருந்து வெளியேற திட்டம்?
-
பெண் ஊழியர்களின் மாதவிடாய் விடுப்பு மாநில அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
-
பிரதமர் மோடியிடம் முதல்வர் வழங்கிய 18 கோரிக்கை மனு
-
தாய்க்கு பணிவிடை செய்ய முடியவில்லை மாடியிலிருந்து தள்ளி கொலை செய்த மகன்
-
கிரைம் கார்னர்