இலங்கை ஈரான் கடற்படை வீரர்கள் 238 பேர் நாடு திரும்பினர்
கொழும்பு: போரால் பாதிக்கப்பட்டு இலங்கையில் சிக்கியிருந்த 238 ஈரான் கடற்படை வீரர்கள், தங்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய போரின்போது, கடந்த மார்ச், 4ம் தேதி ஈரான் போர்க்கப்பல் 'ஐரிஸ் டெனா' நம் அண்டை நாடான இலங்கை அருகே அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் தாக்குதலில் மூழ்கியது. இதில், 84 பேர் இறந்தனர்; இலங்கை கடற்படை 32 பேரை மீட்டது.
மற்றொரு ஈரான் கப்பல் 'ஐரிஸ் புஷேர்' இயந்திர கோளாறு காரணமாக இலங்கை அருகே சிக்கியது. அதில் இருந்த, 206 பேரும் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டனர். ஈரான் கடற்படை வீரர்கள் அனைவரும் இலங்கையிலேயே தங்கியிருந்தனர்.
அவ ர்கள் அனைவரும் நேற்று முன்தினம் துருக்கி விமானம் மூலம் ஈரானுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இலங்கை அரசு இந்த மீட்பு மற்றும் திருப்பி அனுப்பும் பணியை மனிதாபிமான அடிப்படையில் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும்
-
பண்டிப்பூர் வனப்பகுதி சுரங்கப்பாதை திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு
-
நசீர் அகமதுவுடன் ஜமீர் சந்திப்பு காங்கிரசிலிருந்து வெளியேற திட்டம்?
-
பெண் ஊழியர்களின் மாதவிடாய் விடுப்பு மாநில அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
-
பிரதமர் மோடியிடம் முதல்வர் வழங்கிய 18 கோரிக்கை மனு
-
தாய்க்கு பணிவிடை செய்ய முடியவில்லை மாடியிலிருந்து தள்ளி கொலை செய்த மகன்
-
கிரைம் கார்னர்