துருக்கி பள்ளியில் மீண்டும் தாக்குதல் 9 பேர் பலி; 20 பேர் காயம்

அங்காரா: துருக்கியில் பள்ளி ஒன்றில் நுழைந்து மா ணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், ஒன்பது பேர் பலியாகினர்; 2-0 பேர் காயமடைந்தனர். தாக் குதல் நடத்திய மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

மேற்காசிய நாடான துருக்கியில், சான்லியுர்பா மாகாணத்தில் உள்ள பள்ளியில், முன்னாள் மாணவர் ஒருவர் சமீபத்தில் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில், 16 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்தியவர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், கோக்ரமான்மாரா மாகாணத்தில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் நேற்று சரமாரியாக சுடத் தொடங்கினார்.

இரண் டு வகுப்பறைகளில் அவர் நடத்திய இந்த திடீர் தாக்குதலில், ஒன்பது பேர் உயிரிழந்தனர்; 20 பேர் காயமடைந்தனர். இதன் பின், அந்த மாணவர், தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை. தன் தந்தையின் துப்பாக்கியை அந்த மாணவர் பயன்படுத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement