10 நாட்களாக வழங்கப்படாத குடிநீர்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே வாகைகுளம் ஊராட்சியில் 10 நாட்களாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து பெண்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.

வாகைகுளம் ஊராட்சிக்குட்பட்ட அரசு குடியிருப்பு பகுதியில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

இப்பகுதிக்கு ஊராட்சி சார்பில் 10 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை எனக்கூறிய பொதுமக்கள், அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை என குற்றம்சாட்டினர்.

இதனால் 100க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் ஊராட்சி அலுவலகம் முன் ரோடு மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வாகைகுளம் ஊராட்சிமன்ற தலைவர் சுப்புலட்சுமி நந்தகுமார், போலீசார் பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

உடனடியாக லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது.

Advertisement