உங்கள் துரோகத்துக்கு மே 4ல் தண்டனை கிடைக்கும் இ.பி.எஸ்.,சை எச்சரித்து ஸ்டாலின் விளாசல்

சேலம்: சேலம், கோட்டை மைதானத்தில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்-டணி சார்பில், வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் நேற்று நடந்-தது. அமைச்சர் ராஜேந்திரன் வரவேற்றார். தி.மு.க., தலைவர் ஸ்டாலின், சேலம் மாவட்டத்தில், 11 தொகுதிகளில் போட்டி-யிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசியதாவது:


கடந்த, 5 ஆண்டு தி.மு.க., ஆட்சியில் சேலத்தில், 129 கோடி ரூபாய் மதிப்பில் ரயில்வே மேம்பாலம், வெள்ளி கொலுசு உற்-பத்தி மையம், கருப்பூரில் மினி டைட்டல் பூங்கா, சேலம், மேட்டூர், ஆத்துாரில் அறிவுசார் மையங்கள், அம்மாபேட்டையில் புறநகர் மருத்துவ-மனை, இடைப்பாடி, மேட்டூரில் புது பஸ் ஸ்டாண்ட், கருப்பூர் பொறியியல் கல்லுாரியில் நவீன விளையாட்டு அரங்கம், இடைப்-பாடி, மேட்டூர், சங்ககிரியில் மினி ஸ்டேடியம் அமைக்கப்பட்டு வருகின்றன.
பெண்களுக்கான இட ஒதுக்கீட்டில் பிரச்னை இல்லை. தொகுதி மறுவரையறைதான் பிரச்னை. அதனால் தமிழகத்தை பேராபத்து சூழ்ந்துள்ளது. அதற்காக பெண்கள் கோலம் போட்டு, நாளை எதிர்ப்பை வெளிகாட்ட உள்ளனர்.
இ.பி.எஸ்., கடைசி வரை கோழை, அடிமையாக இருக்க போகி-றாரா? அப்படி இருந்தால், 'பல்லக்கு துாக்கி' என வரலாற்றில் எழுத நேரிடும். தமிழகம் கொடுக்கும் கடைசி வாய்ப்பாக ஒருமு-றையாவது, பா.ஜ.,வை எதிர்த்து பேசுங்கள். எஃகு பெருமை பெற்ற சேலத்தில் பிறந்துவிட்டு, டில்லிக்கு முதுகு வளைந்து இருப்பது வெட்கமாக இல்லையா? தமிழனாக, தமிழகத்தில் இருந்து கொண்டு தமிழகத்துக்கு துரோகம் செய்யலாமா? உங்கள் துரோகத்துக்கு, மே, 4ல் தண்டனை கிடைக்கும். பெண்களின் ஆதரவோடு, தி.மு.க, மீண்டும் ஆட்சி அமைக்கும். அதற்கான ஒத்திகைதான் நான் வெளியிட்டுள்ள சூப்பர் ஸ்டார் தேர்தல் அறிக்கை. இல்லத்தரசிகளுக்கு, 8,000 ரூபாய் கூப்பன் திட்டத்தி-லேயே எதிரிகள் எல்லாம், 'குளோஸ்' ஆகிவிட்டார்கள். பெண்கள் வேலைக்கு செல்வதை எளிதாக்க, 1,000 குழந்தைகள் காப்பகம் உருவாக்கப்படும். இப்படி நிறைய திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் உள்ளன.
கடந்த தேர்தலில், சேலத்தில், எதிர்பார்த்த வெற்றி கிடைக்க-வில்லை. எனினும் நிறைய திட்டங்களை வாரி கொடுத்தோம். 2024 எம்.பி., தேர்தலில் பெரிய வெற்றியை தந்தீர்கள். அதேபோல், 2026 சட்டசபை தேர்தலிலும் தொடர வேண்டும். தமிழகமா, டில்லியா என்றால் தமிழக அணி தான் வெல்ல வேண்டும். தமிழகத்தை காக்க, தி.மு.க., மீண்டும் ஆட்சி அமைக்கும். நல்லாட்சி தொடர, தமிழ்நாடு போராடும் வெல்லும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement