சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் மக்கள் அவதி

க வரைப்பேட்டையில் உள்ள பழவேற்காடு சாலையில், நுாற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் கடைகள் உள்ளன. இச்சாலையில் கால்வாய் இருந்தும், அவை வடிந்து செல்ல வசதியில்லை. தினசரி கால்வாயில் இருந்து நிரம்பி வழியும் கழிவுநீர், சாலையில் ஆறாக ஓடுகிறது.

இதனால், அப்பகுதி மக்கள் சுகாதார சீர்கேட்டிற்கு ஆளாகின்றனர்.

இச்சாலை வழியாக கடந்து செல்லும் வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, பழவேற்காடு சாலையில் கழிவுநீர் வடிந்து செல்லும் வசதியை, கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும்.

- எம்.ஜெயசந்திரன்,

கவரைப்பேட்டை.

Advertisement