பெருந்துறை சாலையில் உயர்மட்ட மேம்பாலம் பா.ஜ., வேட்பாளர் யுவராஜா வாக்குறுதி
ஈரோடு : ஈரோடு மேற்கு தொகுதி பா.ஜ., வேட்பாளர் எம்.யுவராஜா நேற்று காசிபாளையம் பகுதி, பாரதிபாளையம் வீதிகள், நேதாஜி நகர், குறிக்காரன்பாளையம், கக்கன் நகர், விவேகானந்தம் வீதி உட்பட பல்வேறு இடங்களில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தாமரை சின்னத்துக்கு ஓட்டு சேகரித்தார்.
அப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடு, வீடாக சென்று தாமரை சின்னத்துக்கு ஓட்டுக்கேட்டு வேட்பாளர் எம்.யுவராஜா பேசியதாவது:
ஈரோடு சோலாரில் செயலற்ற புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது. கனி
ராவுத்தர் குளம் அருகே பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்படும் என, 4 ஆண்டு
களாக கூறி, இதுவரை இடத்தை கூட காட்ட வில்லை. இதனால் மக்கள் போக்குவரத்து நெரிசலை சந்திக்கின்றனர். கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் ஈரோடு காளிங்கராயன் விடுதி முதல், திண்டல் மேடு வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்க மண் பரிசோதனை, இதர வரைபட பணிகள் முடிந்தது. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததால் அவை கிடப்பில் போட்டுள்ளனர். மேட்டூர் சாலையிலும் பாலம் பணி நடக்கவில்லை. மீண்டும் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், பாலம் பணிகள் முழு வீச்சில் செய்து முடித்து, போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காணப்படும்.
தி.மு.க., ஆட்சியில் கடந்த, 5 ஆண்டுகளில் கிடப்பில் போடப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டம், மகளிருக்கான டூவீலர் திட்டம் போன்ற திட்டங்கள் மீண்டும் புத்துயிர் வழங்கி, பயனாளிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்.
இவ்வாறு பேசினார்.