அரசு திட்டங்கள் கிடைக்க நடவடிக்கை அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரசேகரன் பேச்சு


எருமப்பட்டி : தமிழகத்தில், வரும், 23ல் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிடும், அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரசேகரன், நேற்று, முத்துக்காப்பட்டி, போடிநாய்க்கன்பட்டி, பாளையபாளையம் பகுதிகளில் தீவிர பிரசாரம் ‍மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
கடந்த முறை, நான் எம்.எல்.ஏ.,வாக இருந்தபோது, குடிநீர்தொட்டி, ரேஷன்கடை, சாலை வசதி செய்து கொடுத்துள்ளேன். உங்கள் கஷ்டங்களை, நான் உணர்ந்தவன். முத்துக்காப்பட்டியில், இங்குள்ள நிர்வாகிகள், எம்.எல்.ஏ., பெயரில் பெயர் பலகை வைக்கட்டும். நான் இந்த பகுதிக்கு வரும்போது, அந்த பலகையில் கை‍யெழுத்திட்டு செல்கிறேன். அப்போது தான், நான் எத்தனை முறை இந்த பகுதிக்கு வந்தேன் என, மக்களுக்கு தெரியும். அரசின் திட்டங்கள் உங்களுக்கு வருகிறதா என்பதை நான் உறுதி செய்கின்றேன். எனவே, நீங்கள் இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டளித்து என்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு பேசினார்.
அ.தி.மு.க., நிர்வாகிகள் கருணாமூர்த்தி, லோகநாதன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement