வியாபாரியிடம் இருந்து ரூ.2 லட்சம் பறிமுதல்
பெரம்பூர்: வியாபாரியிடம் இருந்து, உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட 2 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
சவுகார்பேட்டையைச் சேர்ந்தவர் சோனியே ஜெயின், 28. இவர், நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில், தன் காரில் பெரம்பூர் நரமுக விநாயகர் கோவில் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, தேர்தல் கண்காணிப்பு குழுவினர் இவரது காரை சோதனையிட்டனர்.
அவரிடம் உரிய ஆவணமின்றி 2 லட்ச ரூபாய் இருந்தது கண்டறியப்பட்டது. அதை திரு.வி.க.நகர் தொகுதி தேர்தல் கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர். விசாரணையில், குளிர்சாதனங்களுக்கு பயன்படுத்தும் 'காஸ்' விற்பனை செய்யும் இவர், சம்பாதித்த பணத்தை வீட்டுக்கு எடுத்துச் சென்றபோது அதிகாரிகளிடம் சிக்கியது தெரியவந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் பெரம்பூர் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
லஞ்சம் வாங்கியதை நிரூபித்தால் நெருப்பில் குதிக்கிறேன்: அமைச்சர் துரைமுருகன்
-
தி.மு.க.வினர் தேர்தல் பணி மந்தம்: 'நிதி சென்று சேரவில்லை' என புகார்
-
ஆசிரியர்களுக்கு விடுமுறை நாள்: சி.இ.ஓ.
-
பிரசாரத்தில் இணைந்த அமைச்சர்கள்
-
குண்டூசி முதல் அழியா மை வரை... வாக்குச்சாவடி பொருட்கள் வந்தன
-
தலைமையிடமாக பெருமாநல்லுார் புதிய தாலுகா உருவாக்கப்படும்: அ.தி.மு.க. வேட்பாளர் ஆனந்தன் வாக்குறுதி
Advertisement
Advertisement