சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு: அட்சயா பள்ளி 100% தேர்ச்சி

கோவை: அட்சயா கல்விக் குழும பள்ளி மாணவர்கள், சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இத்தேர்வில் 7 பேர் 490 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும், 36 பேர் 480 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும் பெற்றுள்ளனர்.

தமிழில் 19 பேர், அறிவியலில் ஒருவர், கணினி அறிவியலில் 39 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இந்த சிறப்பான வெற்றியைச் சாதித்த மாணவர்கள், உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரை பள்ளி நிறுவனர் புருஷோத்தமன், தாளாளர் சுந்தராம்பாள், செயலாளர் பட்டாபிராம், முதல்வர் ராஜேஸ்வரி ஆகியோர் வாழ்த்தி பாராட்டினர்.

Advertisement