ஓட்டு சாவடியாகும் பள்ளிக்கூடங்கள்

உத்தரகோசமங்கை: திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி மற்றும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஓட்டுச் சாவடிகள் தயார்படுத்தும் பணியில் தீவிரமாக சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏப்., 23ல் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதை முன்னிட்டு சேதமடைந்த பள்ளிகளின் அறைகளை பராமரித்து வர்ணம் பூசி தயார் செய்து வருகின்றனர். மின்சார சப்ளை மற்றும் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை அத்தியாவசிய தேவைகளை கருத்தில் கொண்டு பணியாற்றி வருகின்றனர்.

Advertisement