'கமகம' மணத்துடன் தேர்தல் விழிப்புணர்வு
சட்டசபை தேர்தலில் நுாறு சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் பல்வேறு நுாதன விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
கேக் கண்காட்சி திருப்பூர் மத்திய பஸ் நிலைய வணிக வளாகத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கான சிறப்பு 'கேக்' கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கலெக்டர் மனிஷ் நாரணவரே தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.
கண்காட்சியில் இடம்பெற்றிருந்த ஒவ்வொரு கேக்கிலும் '100 சதவீதம் ஓட்டுப்பதிவு', 'கட்டாயம் வாக்களிப்போம்' போன்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.
தேர்தல் சின்னமான 'தேர்தல் காளையன்' உருவம் மற்றும் விழிப்புணர்வு ஓவியங்கள் கேக்குகளில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்தது பார்ப்பவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

கும்மியாட்டம்
ராயபுரம் பகுதியில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற மனிதச் சங்கிலி இயக்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பணியாளர்கள் 'ஏப்ரல் 23' என்ற தேர்தல் தேதியைத் தங்கள் பதாகைகள் மூலம் வரிசையாக வடிவமைத்தனர்.
பின், அந்த வாசகத்தைச் சுற்றி வந்து கும்மியடித்துப் பாடி பொதுமக்களிடையே தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். தற்காப்பு வீரர்களின் அதிரடியான கராத்தே விழிப்புணர்வு நிகழ்ச்சியும் பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்தது.
கேன்களில் ஸ்டிக்கர் குடிநீர் கேன்களில் தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டும் பணியும் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் ஒவ்வொரு வீட்டிற்கும் செல்லும் குடிநீர் கேன்கள் வழியாக வாக்களிப்பதன் அவசியத்தை அதிகாரிகள் வலியுறுத்தினர்.
நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் (டி.ஆர்.ஓ) கார்த்திகேயன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கமித்திரை உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனர்.
பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில்,அதிகாரிகளின் இந்தத் தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் திருப்பூரில் வரவேற்பைப் பெற்றுள்ளன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு; ஜூன் 15ம் தேதிக்கு ஒத்திவைப்பு
-
சோதனை என்கிறார் செல்வப்பெருந்தகை; இல்லை என்கிறது வருமான வரித்துறை
-
வார தொடக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைவு
-
கருத்துக்கணிப்புகள் மக்கள் கணிப்புகள் என எதிலும் வெல்வோம்: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
சர்ச், மசூதி, கோயிலில் விஜய் வழிபாடு
-
மது பாட்டிலில் ரூ.10 ஸ்டிக்கர் காணோமுங்க; தேர்தல் நேரம் என்பதால் தவிர்ப்பு
Advertisement
Advertisement