கடை பூட்டை உடைத்து திருட முயன்றவர் கைது
தர்மபுரி: தர்மபுரி அடுத்த புலிக்கரை கல்லாங்காட்டனுார் கிராமத்தை சேர்ந்-தவர் சூசைமணி, 63. இவர் கொல்லப்பட்டி பிரிவு சாலை அருகே, கடைகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார்.
நேற்று முன்-தினம் அதிகாலை, 2:00 மணிக்கு வெளியே சத்தம் கேட்டு பார்த்-தபோது, இரும்பு கம்பியுடன் அங்கிருந்த ஒருவர், கடையின் பூட்டை உடைக்க முயற்சி செய்தார். இது குறித்து, சூசைமணி ரோந்து போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வருவ-தற்குள் பூட்டை உடைக்க முயன்ற நபர் தப்பிச்சென்றார். நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு செல்லியம்பட்டி சுடுகாடு பகு-தியில், ஹீரோ ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கில் சந்தேகப்படும்படி-யாக இருந்த நபரை, பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்-தனர்.போலீசார் விசாரணையில், ஆந்திர மாநிலம், குப்பம் தாலுகாவை சேர்ந்த சதீஷ், 29, என்பது தெரியவந்தது. மேலும், கொல்லப்-பட்டி அருகே, கடையின் பூட்டை உடைத்து திருட முயன்றதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, மதிகோன்பாளையம் போலீசார் சதீஷை கைது செய்தனர்.
மேலும்
-
அ.தி.மு.க., வெற்றி தெளிவாக தெரிகிறது: கோகுல இந்திரா
-
செய்யூர் தாசில்தார் அலுவலகத்தில் மின்தடை: பொதுமக்கள் அவதி
-
ஊழலற்ற ஆட்சியை விஜய் தருவார்:P த.வெ.க., வேட்பாளர் பிரபாகர் பேச்சு
-
இருசக்கர வாகன அணிவகுப்பில் ஓட்டு சேகரித்தார் சிற்றரசு
-
அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா
-
தவறான சிகிச்சையால் இளம்பெண் இறப்பு? மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை!