மேற்கு வங்க தேர்தல்; ரயில்கள் ஹவுஸ்புல்

திருப்பூர்: மேற்கு வங்கத்தில் முதல்கட்ட தேர்தல் நடக்கவுள்ள நிலையில், நேற்று முதலே அம்மாநிலம் செல்லும் ரயில்கள் அதிகளவில் பயணிகள் பயணிக்க துவங்கினர்.

மொத்தம், 294 சட்டசபை தொகுதிகளை கொண்ட, மேற்கு வங்க மாநிலத்தில் முதல் கட்ட தேர்தல் வரும், 23ம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், கோவை, திருப்பூரை கடந்து மேற்கு வங்க மாநிலத்தின் ஹவுரா, ஜல்பைகுரி, கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் ரயில்களில் நேற்றே கூட்டம் அதிகரித்தது.

நேற்று மதியம் திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் வந்த ஆலப்புழா - தன்பாத் ரயிலில் பயணிக்க, பிளாட்பார்மில் அதிகளவில் பயணிகள் காத்திருந்தனர். ரயிலின் பொது பெட்டிகளில் ஏற பலரும் முண்டியடித்தனர். இன்றும், நாளையும் கூடுதலாக பயணிகள் ரயிலில் மேற்கு வங்க மாநிலத்துக்கு பயணிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement