16,000 கோலங்கள் போட்டு சாதனை

ஆவடி: தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கையாக, திருவள்ளூ ரில் ஒரே நேரத்தில் 16,000 கோலங்கள் போட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தும் வகையில், 'தேர்தல் திருவிழா - தமிழகத்தின் பெருவிழா' என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

இதில், திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் தலைமையில், மாவட்டம் முழுதும் 4,016 ஓட்டுச்சாவடி மையங்களில், ஒரே நேரத்தில் 16,000 கோலங்கள் போடப்பட்டன.

இது, 'எலைட் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' ஆகியவற்றால் பதிவு செய்யப்பட்டு, 'தமிழன் பு க் ஆப் ரெக்கார்ட்ஸால்' அங்கீகரிக்கப்பட்டு உள்ளது.

Advertisement