எம்.சி.டி., மேயர் தேர்தல் வரும் 29ம் தேதி நடக்கிறது
புதுடில்லிஎம்.சி.டி., எனும் முனிசிபல் கார்ப்பரேஷன் ஆப் டில்லியின் மேயர், துணை மேயர் மற்றும் மூன்று நிலைக்குழுக்களின் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக, வரும், 29ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது என நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டில்லி மாநகராட்சி மேயர், ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அந்த வகையில், முதல் ஆண்டு, பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.
அடுத்த ஆண்டு, அதாவது இரண்டாவது ஆண்டு, மேயர் பதவிக்காக பொதுத் தேர்தல் நடந்தது.
மூன்றாவது ஆண்டு, ரிசர்வ்டு எனும் பட்டியல் இனத்தவர்களுக்கு நடந்தது. அடுத்த இரண்டாண் டுகளுக்கு பொதுப்பிரிவினர் தேர்தல் நடக்க உள்ளது.
கடந்த முறை, ஆம் ஆத்மி கட்சி இந்த தேர்தலை புறக்கணித்ததால், பா.ஜ.,வைச் சேர்ந்த ராஜா இக்பால் சிங், மேயராக உள்ளார். அவருக்கு ஆதரவாக ஓட்டுகள் பதிவானதை அடுத்து, நான்காவது ஆண்டில் அவர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த ஆண்டு, கடைசி ஆண்டாக, வரும், 29ம் தேதி மேயர், துணை மேயர் மற்றும் நிலைக் குழுக்களுக்கான உறுப்பினர் பதவியிடங்களுக்கு தேர்தல் நடக்க உள்ளது.
கடந்த முறை நடந்த தேர்தலை ஆம் ஆத்மி கட்சியினர் புறக்கணித்தனர்.
அதற்கு முன் நடந்த மூன்று ஆண்டுகளாக, அந்த கட்சியை சேர்ந்தவர்கள் தான் மேயர் மற்றும் துணை மேயர் பதவியிடங்களை வகித்தனர். 137 ஓட்டுகளை பெறும் நபர், மேயராக தேர்வு செய்யப்படுவார்.
மேலும்
-
தமிழகத்தை சீரழித்த திமுக-காங் கூட்டணியை விரட்டியடிப்போம்: மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல்
-
நேற்று சரிவு; இன்று உயர்வு: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 அதிகரிப்பு
-
அமெரிக்காவில் கஞ்சாவுடன் பிடிபட்ட ஏர் இந்தியா துணை விமானி; இந்தியாவுக்கு நாடு கடத்தல்
-
பெரம்பூரில் இன்று விஜய் பிரசாரம் ரத்து
-
என் குடும்பத்தை சிதைத்த பெருமை அன்புமணி மனைவி சவுமியாவையே சேரும்: ராமதாஸ் புகார்
-
கட்டுமான திட்டங்களுக்கு பிரீமியம் எப்.எஸ்.ஐ., எப்படி கணக்கிடப்படுகிறது?