பஸ் ஸ்டாண்டிற்குள் கழிவுநீர் தேக்கம் :துர்நாற்றத்தால் பயணியர் பாதிப்பு
உடுமலை: உடுமலை பஸ் ஸ்டாண்டில், திறந்தவெளியில் திட, திரவ கழிவுகள் வெளியேற்றப்படுவதால், கடும் துர்நாற்றம் நிலவுகிறது.
உடுமலை பஸ் ஸ்டாண்டில் இருந்து, பல்வேறு நகரங்கள் மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து, 300க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன.
தினமும், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணியர் வந்து செல்லும் நிலையில், அடிப்படை வசதிகள் இல்லாததால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
பயணியர் பஸ் ஸ்டாண்டிற்குள் நுழையும் பிரதான வழித்தடங்களை ஆக்கிரமித்து, வணிக வளாகத்திலுள்ள கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால், பஸ்கள் வரும் வழியிலேயே பொதுமக்கள் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.
பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகத்தில் உள்ள உணவகங்கள், ஓட்டல்களிலிருந்து, இலை மற்றும் உணவு கழிவுகள் நேரடியாக பயணியர் காத்திருக்கும் பகுதியில் கொட்டப்படுகிறது. மேலும், ஓட்டல் மற்றும் டீக்கடைகளிலிருந்து, உணவு கழிவுகள், கழிவு நீர், மூணாறு மற்றும் திருப்பூர் பஸ்கள் நிற்கும் பகுதியில் வெளியேற்றப்படுகிறது.
கழிவுநீர் வெளியேற வழியின்றி, குளம் போல் தேங்கியுள்ளது. சாக்கடை கழிவு நீரில் பயணியர் நடந்து செல்லும் அவல நிலை உள்ளது. இதனால், பஸ் ஸ்டாண்டில் துர்நாற்றம், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
பஸ் ஸ்டாண்டிற்குள் கழிவுகள் கொட்டுவதோடு, கழிவு நீரை நேரடியாக வெளியேற்றும் கடைகள் மீது நகராட்சி அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மேலும்
-
ஜப்பான் 6.2 ரிக்டர் அளவுக்கு மீண்டும் நிலநடுக்கம்
-
சூடான் விமான விபத்தில் 14 பேர் பலி
-
சீனா மூன்று முக்கிய ஒப்பந்தங்கள் பாக்., உடன் கையெழுத்து
-
சோமாலியா சிமென்ட் ஏற்றி சென்ற சரக்கு கப்பல் கடத்தல்
-
ஈரான் அமைச்சர் தொடர் பயணம்
-
3 நாளில் எண்ணெய் குழாய்கள் வெடிக்கும் புதிய கெடுவுடன் ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்