கண்மாய்களில் நாட்டு உடை மரங்கள் வளர்க்க எதிர்பார்ப்பு : வனத்துறைக்கு விவசாயிகள் வேண்டுகோள்
திருப்புவனம்:ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்ட கண்மாய்களில் நாட்டு உடை மரங்களை வளர்க்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை கிராமப்புற கண்மாய்களின் உட்புறம் உடைமரங்களும், கரைகளில் புளியமரம், பனைமரம், வேம்பு உள்ளிட்ட மரங்களையும் விவசாயிகள் வளர்த்திருந்தனர். இந்த மரங்களின் மூலம் விவசாயிகள் வளர்க்கும் ஆடு, மாடு உள்ளிட்டவற்றுக்கு உணவு தேவைகள் பூர்த்தியானது. பெரும்பாலும் உட்புறம் உள்ள உடை மரங்களில் பறவைகள் கூடு கட்டி குஞ்சு பொரித்து வந்தன. மேலும் உடை மரங்களில் இருந்து விவசாயிகள் பயன்படுத்தும் ஏர் கலப்பை, மண்வெட்டி, கோடாரி தயாரிக்கப்பட்டன. இந்த மரங்கள் வறட்சியை தாங்கி வளர கூடியது, நிலத்தடி நீரையும் உறிஞ்சாது. இதனால் விவசாயிகளின் பாதுகாவலனாக வளர்ந்து வந்தன. ஆனால் சமீப காலமாக சீமை கருவேல மரங்களை லாப நோக்கில் சிலர் வளர்க்க தொடங்கினர்.
சீமை கருவேல மரங்கள் மூலம் பெருமளவு வருவாய் கிடைப்பதால் கண்மாய் பாசன சங்க நிர்வாகிகளும் சீமை கருவேல மரங்களை வளர்க்க ஆர்வம் காட்டினர். இதனால் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டன. தமிழக அரசு கிராமப்புற கண்மாய்களில் உடை மரங்களை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்புவனம் தாலுகவில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 44 கண்மாய்களும், ஊராட்சி ஒன்றியம் மற்றும் கோயில்கள் கட்டுப்பாட்டில் 159 கண்மாய் மற்றும் ஊரணிகளும் உள்ளன. இவற்றில் உள்ள கருவேல மரங்களை முற்றிலும் அகற்றிவிட்டு உடை மரங்கள் வளர்க்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் விவசாயத்துக்கு தேவையான தண்ணீரை அதிகளவு கண்மாய்களின் தேக்க முடியும். விவசாயத்திற்கு தேவையான தண்ணீரும் கால்நடைகள் பறவைகள் பயன்பாட்டிற்கு தேவையான தண்ணீரும் வருடம் முழுவதும் கிடைக்கும்.
கிராமப்புற கண்மாய்களின் உட்புறத்தில் உடை மரங்களை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பூவந்தி உட்பட சில கிராம கண்மாய்களில் மட்டுமே உடைமரங்கள் உள்ளன. அவற்றையும் சிலர் வெட்டி கடத்தி வருகின்றனர். எனவே வனத்துறை விவசாயிகளுக்கு தேவையான உடை மரங்களை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்./
மேலும்
-
ஜப்பான் 6.2 ரிக்டர் அளவுக்கு மீண்டும் நிலநடுக்கம்
-
சூடான் விமான விபத்தில் 14 பேர் பலி
-
சீனா மூன்று முக்கிய ஒப்பந்தங்கள் பாக்., உடன் கையெழுத்து
-
சோமாலியா சிமென்ட் ஏற்றி சென்ற சரக்கு கப்பல் கடத்தல்
-
ஈரான் அமைச்சர் தொடர் பயணம்
-
3 நாளில் எண்ணெய் குழாய்கள் வெடிக்கும் புதிய கெடுவுடன் ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்