ஆஸ்திரேலிய ஆந்தை மீட்பு

மானாமதுரை:மானாமதுரையில் காயம்பட்டு கிடந்த அரிய வகை ஆஸ்திரேலியா ஆந்தையை தீயணைப்பு துறையினர் மீட்டு காட்டிற்குள் விடுவித்தனர்.

மானாமதுரை அரசு மருத்துவமனை அருகே சங்கு விநாயகர் கோயில் வளாகத்தில் நேற்று காலை அரியவகை ஆஸ்திரேலிய ஆந்தை ஒன்று காயம்பட்டு பறக்க முடியாமல் கிடந்தது. இதையடுத்து அங்கிருந்த காகம் உள்ளிட்ட ஏராளமான பறவைகள் அதனை விரட்டி,விரட்டி கொத்திக் கொண்டிருந்தது. இதை கண்டவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு துறையினர் ஆந்தையை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து வனப்பகுதியில் விட்டனர்.

Advertisement