கிருஷ்ணராயபுரம் தி.மு.க., வேட்பாளர் கடவூர் மேற்கு ஒன்றியத்தில் பிரச்சாரம்

கிருஷ்ணராயபுரம், கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்ட

சபை தொகுதியில், கடவூர் மேற்கு ஒன்றியத்தில், களத்துப்பட்டி, குருணி குளத்துப்பட்டி, தேவர்மலை, சீத்தப்பட்டி, குடிவண்டை, திருமலைராயபுரம், மேட்டூர், நாயக்கனுார், நரியம்பட்டி, புதுார், மோளப்பட்டி, செம்மனகோன்பட்டி, நல்லாகவுண்டன்பட்டி, அன்னாவி பூசாரிபட்டி, சின்ன முத்தாம்பாடி, சாலையூர், பூசாரிப்பட்டி, குருணியூர், மைலயம்பட்டி, அண்ணாநகர் ஒத்தக்கடை, வாழ்வார்மங்கலம், தென்னகர், வீரசிங்கம்பட்டி, குமரகவுண்டனுார், நவகுளம், சங்கிபூசாரியூர், தரகம்பட்டி உள்பட கிராமங்களில் கிருஷ்ணராயபுரம் தி.மு.க., வேட்பாளர் சி.கே.ராஜா தீவிரமாக மக்களிடம் வாக்குகள் சேகரித்தார். அப்போது அவரை மலர்கள் துாவியும், ஆரத்தி எடுத்தும் மக்கள் வரவேற்றனர்.

பின்னர் கிருஷ்ணராயபுரம் தி.மு.க., வேட்பாளர் சி.கே.ராஜா பேசியதாவது:
முதல்வர் கருணாநிதியின் ஆட்சி காலத்தில், 2008ல் மாயனுார் கதவணை கட்டப்பட்டது. இந்த கதவணையில் தேக்கி வைக்கப்படும், 1 டி.எம்.சி., தண்ணீரால் இப்போது, 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாய கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. காவிரி- -வைகை- -குண்டாறு நதி நீர் இணைப்பு திட்டப் பணிகள் நடந்து வருகிறது. தி.மு.க., ஆட்சி அமைத்தவுடன் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்.
குளம் சீரமைப்பு
இந்த தொகுதியில், தி.மு.க., அரசு சார்பில், 900 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த தொகுதியில், சிமென்ட் சாலைகள் அமைத்தல், மின் விளக்கு மற்றும் சிறிய குளம் பணிகள் சீரமைக்கப்பட்டுள்ளது. கடவூரில், 399 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்
பட்டுள்ளன.
பல ஆண்டுகளாக விவசாயிகள் வைத்த கோரிக்கையை அடுத்து, காவிரி ஆற்றிலிருந்து அந்த நீரை எடுத்து விவசாயத்திற்கு பயன்படுத்தக்கூடிய, மூன்று திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் குறைந்த
பட்சம், 400 லிருந்து 700 ஏக்கர் வரை பாசன வசதி பெறும். தி.மு.க., தேர்தல் அறிக்கையில், முதியோர் ஓய்வூதியம், 1,200 லிருந்து, 2,000 ரூபாயாக உயர்த்தி தரப்படும். 2030ம் ஆண்டுக்குள் ஆதி திராவிடர், பழங்குடியினருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்படும்.
மகளிர் உரிமை தொகை ரூ.2,000
கட்டுமான தொழிலாளர் நலவாரியம் மூலம் வழங்கப்படும் ஓய்வூதியம், 1,200 லிருந்து, 2,000 ரூபாயாக உயர்த்தப்படும். ஒரு கோடியே, 31 லட்சம் பேர் பெற்று வரும் மகளிர் உரிமைத் தொகை, ​1,000 ரூபாயில் இருந்து 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்​கப்​படும்.
இலவச மின்​சாரம் பெறும், 20 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட விவசாயிகளுக்கு நவீன மின் பம்ப்செட் வழங்​கப்​படும். முதல்​வரின் மருத்​துவ காப்​பீடு திட்​டத்​தில் சேர்க்கப்படுவதற்கான வரு​மான வரம்பு, 5 லட்​ச​ம் ரூபாயாகவும், காப்​பீடு
​தொகை, 10 லட்சம் ரூபாயாகவும் உயர்த்​தப்​படும். நெல் கொள்​முதல் விலை குவிண்​டாலுக்கு, 3,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
பேரிடர் கால இழப்​பீடு​கள் ஹெக்​டேர் ஒன்​றுக்​கு, இறவை பாசன பயிர்​கள் மற்​றும் நெற்​ப​யிர்​களுக்கு, 25 ஆயிரம் ரூபாய், நீண்​ட​கால பயிர்​களுக்கு, 27 ஆயிரம் ரூபாய், மானாவாரி பயிருக்கு, 12 ஆயிர​ம் ரூபாயாக உயர்த்தி வழங்​கப்​படும் ஆகிய வாக்குறுதிகள், தி.மு.க., ஆட்சி அமைத்தவுடன் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
பிரச்சாரத்தில், கடவூர் ஊராட்சி ஒன்றிய தி.மு.க., நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட பலர்
பங்கேற்றனர்.

Advertisement