அதிமுக என்ற கட்சி ஒன்றே தமிழகத்தில் இல்லை; சொல்கிறார் ராகுல்
நமது நிருபர்
''இப்பொது இருக்கும் அதிமுக முகமூடி தான். அதிமுக என்ற கட்சி ஒன்றே தமிழகத்தில் இல்லை'' என தமிழக வந்துள்ள காங்கிரஸ் எம்பி, லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் தேர்தல் பிரசாரத்தில் பேசுகையில் தெரிவித்தார். அவர் பேசும் போது எந்த இடத்திலும் முதல்வர் ஸ்டாலின் பெயரை குறிப்பிடவில்லை.
பொன்னேரியில் தேர்தல் பிரசாரத்தில் ராகுல் பேசியதாவது: தமிழகத்திற்கு வருவது இங்கு உரை நிகழ்த்துவது எப்போதும் மரியாதைக்குரிய விஷயமாகும். தமிழகத்தில் உரை நிகழ்த்துவது எப்போதும் எனக்கு பெருமை; என் இதயத்தில் தமிழக மக்களுக்கு முக்கிய இடம் உள்ளது. தமிழக மக்கள் மீதும், தமிழ் மீதும் எனது அளவு கடந்த அன்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. நான் தமிழகத்தில் பிறக்காவிட்டாலும் எனது குடும்பம் இங்கு இல்லாவிட்டாலும் எனது உணர்வு இங்கு ஒன்றியிருக்கிறது.
எவ்வளவு தைரியம்
நான் காஷ்மீரை சேர்ந்தவன்; அங்கு செல்லும் இல்லத்திற்கு செல்வது போல தோன்றும். தமிழக மக்களுடான எனது உறவு மேம்பட்டுள்ளது. தமிழக மக்கள் மீதான பாஜ, ஆர்எஸ்எஸ் தாக்குதல், என் மீதான தாக்குதல் போன்றது. இவர்களுக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் தமிழ்மொழி, தமிழக மக்கள் மீது தாக்குதல் நடத்துவார்கள். தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தை குறைக்க முயற்சி நடந்தது. இதற்கு தான் தொகுதி மறுவரையறை மசோதா கொண்டுவரப்பட்டது. ஆனால் அந்த நிறைவேறவில்லை.
மகத்துவம்
பாஜ, ஆர்எஸ்எஸ் எண்ணத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாநிலமும் தனது கருத்து, மொழி, கலாசாரத்தை பாதுகாப்பதற்கு உரிமை உண்டு. தமிழ்மொழி, கலாசாரத்தை அழிக்க நினைக்கிறார்கள். அதனை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். தமிழர்களின் மகத்துவத்தை புரிந்து கொள்ள பாஜ மறுக்கிறது. பிரதமர் மோடி, அமித்ஷா பேச்சை கேட்கும் நபர்களை முதல்வர் பதவிக்கு தேடுகின்றனர். பார்லியில் தமிழர்களின் குரலை நசுக்க முயற்சி நடக்கிறது. தமிழர்களின் குரலை ஒடுக்க நடந்த முயற்சியை முறியடித்தோம்.
மிரட்டியதில்லை
சமூகநீதியை தேசத்திற்கே தமிழகம் காட்டியுள்ளது. பாஜ ஒட்டுமொத்த வாழ்நாளிலும் தமிழர்களையும், தமிழ்மொழியையும் தொட முடியாது. அடிப்படையிலேயே பாஜ தமிழினத்திற்கு எதிரானது. தமிழகத்தின் எதிர்காலத்தை தமிழர்களே தீர்மானிக்க வேண்டும். தமிழையும், தமிழக மக்களையும் காப்பதே முதல் குறிக்கோள். அதிமுகவை முற்றிலுமாக பாஜ முடித்துவிட்டது. கூட்டணி கட்சிகளை நாங்கள் மிரட்டியதில்லை. கூட்டணி கட்சிகளை மிரட்ட ஒருபோது காங்கிரஸ் விசாரணை அமைப்புகளை பயன்படுத்தியது இல்லை.
முகமூடி தான்
இப்பொது இருக்கும் அதிமுக முகமூடி தான். பாஜவின் உண்மை முகத்தை மறைக்கும் முகமூடி அதிமுக. அதிமுக என்ற ஒன்றே தமிழகத்தில் இல்லை. இந்தியாவை 2,3 கம்பெனிகள் ஆள முயற்சி செய்கிறது. நான் தமிழையும், தமிழ்மொழியையும் பாதுகாப்பேன். இது அனைத்து கட்சியினருக்கும் தெரியும். தமிழகத்தை டில்லியில் இருந்து ஆள வேண்டும் என்று மோடியும், அமித்ஷாவும் எதிர்பார்க்கின்றனர். தமிழக முதல்வர் தங்களுக்கு கட்டுப்பட வேண்டும் என எண்ணுகின்றனர். காங்கிரஸ், திமுக, கூட்டணி கட்சியினருக்கு தமிழக மக்கள் ஆதரவளிக்க வேண்டும். இவ்வாறு ராகுல் பேசினார்.
சிவக்குமார் பேச்சு
முன்னதாக, கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமார் பேசியதாவது: தமிழகத்தின் முடிவை ஒட்டுமொத்த நாடே எதிர்பார்த்து உற்றுநோக்கி உள்ளது. திமுக- காங்கிரஸ் கூட்டணி 40 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது; பாஜ தற்போது தாய்மொழியை புறக்கணித்து, ஹிந்தியை திணிக்க முயற்சிக்கிறது. அனைவரும் முதலில் தாய் மொழியை மதித்து, அதன்பின் மற்ற மொழிகளுக்கு மதிப்பு தர வேண்டும்.
ராகுலை பிரதமராக முன்மொழிந்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்தியாவின் எதிர்காலம், இண்டி கூட்டணி கையில்; தமிழகத்தின் எதிர்காலம் மக்கள் கையில் உள்ளது. தேர்தலில் திமுக கூட்டணி மூன்றில் இரண்டு பங்குடன் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும். இவ்வாறு சிவக்குமார் பேசினார்.
@block_P@
பொன்னேரியில் தேர்தல் பிரசாரம் செய்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், திமுகவை ஆதரியுங்கள் என்றார்; கூட்டத்தில் 27 நிமிடங்கள் பேசிய ராகுல், முதல்வர் ஸ்டாலின் பெயரை ஒரு முறை கூட உச்சரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.block_P
@block_G@
சோளிங்கரில் ராகுல் பேசுகையில், ''ஸ்டாலின் எனது சகோதரர். அவர் எனது கூட்டாளியாக உள்ளார். அவர் மத்திய அரசின் மிரட்டலுக்கு பணிய மாட்டார்'' என்றார். பொன்னேரியில் முதல்வர் ஸ்டாலின் பெயரை தவிர்த்த ராகுல், சோளிங்கரில் பேசுகையில் குறிப்பிட்டார். block_G
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
பொன்னேரியில் தேர்தல் பிரசாரத்தில் ராகுல் பிரசாரம் பேசினார். தினமலர் யூடியூப் உள்ளிட்ட இணையத்தில் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது.
வீடியோவை பார்க்க கிளிக் செய்யவும்
இந்தியாவில் காங்கிரஸ் என்ற ஒரு கட்சியே இல்லை
தமிழகம் வந்த ராகுலு கையில் ஒரு முக மூடியை எடுத்தா வந்தாரு ஏன் இந்த கூட்டத்தில் திராவிட மாடல் அரசின் முதல்வருடன் சேர்த்து கை கோர்த்து பேசவில்லை அவர்காளுக்குள் என்ன அரசியல் விரிசலா வெளிப்டையாக சொல்ல வேண்டியதுதானே ராகுலை தமிழகம் வந்தபோது அவரை வரவேற்காத முதல்வருக்கு யாரும் வாக்கு அளிப்பபோவதில்லை என்று சபதமெடுத்துக்கொண்டுள்ளார்கள் இனி கட்சி காலி
காங்கிரஸ்ன்னு சொல்லுறதுக்குப் பதிலா இப்படிச் சொல்லிட்டாரு ......
கான் கிராஸ் எலி மாதிரி ஆகி அப்பறம் சுண்டெலி மாதிரி ஆயிடுச்சு. அது பதுங்க இருக்கும் ஒரே இடம் கர்நாடகா. டமில் நாட்டுல அவசரத்துக்கு கூட ஒளிந்து கொள்ள வளை கிடையாது. மே வங்கம் போனா மம்மூதா அடிச்சே கொன்னுடும். கர்நாடகாவில் கூட சிவகுமார் இடங்குடுத்தா சித்து இடம் குடுக்காது. ரெண்டு வீட்டு விருந்தாளி கெண்டை யேறி செத்தான் ன்னு ஒரு சொலவடை இருக்கு. இந்த லட்சணத்துல இன்னும் ராஜா வூட்டு கண்ணுகுட்டின்னு நெனச்சு கிட்டு இருக்கான்.
ஏனுங்க இத்தாலி ராகுல் , ஶ்ரீபெரும்புதூரில் உங்க தந்தையை கொன்றது யார். கொன்றவர்களுக்கு உதவியது யார். கொன்ற குற்றவாளிக்கு டீ கொடுத்து உபசரித்தது யார்
அவுங்களாவது தமிழ்நாட்டுல இல்லை காங்கிரஸ் இந்தியாலையே இல்லையே
காவிரியில் தமிழகத்திற்கான பங்கை தராமல் மறுத்த காங்கிரஸ் சிவகுமார் திமுகாவிற்கு நண்பன் ... காவிரி ஆணையம் அமைத்து தமிழிகத்தின் உரிமை நிலை நாட்டிய பாஜக துரோகி ... கலி காலம்
உங்கள் ஆட்சியில் 17 சமஸ்கிருதப் பல்கலைகழகங்களை அமைத்தது OK. ஆனால் ஒன்றிய காங்கிரஸ் ஆட்சியால் தமிழுக்கு ஒரே ஒரு பல்கலைக்கழகம்கூட புதிதாக அமைக்கவில்லை. ஹிந்தி, சமஸ்கிருதத்திற்குதான் மிக அதிக நிதி ஒதுக்கப்பட்டது. 2024 க்கு முன் இலங்கைக் கடற்படையினர் 700 தமிழ் மீனவர்களை சுட்டுக் கொன்றது வரலாறு. இப்போ என்னவோ தமிழர்களுக்கும் தமிழுக்கும் நல்லது செய்வது போல நடிக்கிறீர்கள். உங்கள் பேச்சு இனிமேல் எடுபடாது.
உங்கள் பரம்பரையே இந்து என்ற முகமூடியை அணிந்து இந்த நாட்டுமக்களை ஏமாற்றி சீரழித்துள்ளீர்கள் அதற்காக இன்னும் 50 ஆண்டுகளுக்கு நீங்கள் ஆட்சிக்கே வரக்கூடாது
நேரு இல்லை என்றால் அறிவை வளர்த்துக் இருக்க முடியாது
இந்திரா ராஜிவ்
உயிர் தியாகம் தெரியுமா உனக்கு பரம்பரை பற்றி பேச உனக்கு தகுதி இல்லை
ஐயா , இந்தியாவை 2 ,3 கம்பெனி யாவது ஆளுகின்றன ஆனால் தமிழகத்தை ஒரே ஒரு கம்பெனி மட்டுமே , அதுவும் ஒரே ஒரு குடும்பம் மட்டுமே ஆளுகிறதுமேலும்
-
கோவை தெற்கு தொகுதி தேர்தல் நிறுத்த வாய்ப்பு; அதிகாரிகள் மத்தியில் பரபரப்பு
-
படித்தவனுக்கு மதிப்பில்லை; நடிக்கிறவனுக்கு தான் மதிப்பு; பிரசாரத்தில் சீமான் ஆவேசம்
-
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து; உரிமையாளர் கோர்ட்டில் சரண்
-
நடிகர் சத்யராஜ் குடும்பத்தினர் நடத்தும் அரசியல் நாடகம்: அப்பா, மகள் திமுக., மகன் தவெக.,
-
இந்தியா எதையும் மறக்காது; பஹல்காம் சம்பவத்தை நினைவு கூர்ந்த ராணுவம்
-
பாமக குழப்பங்களுக்கு ஸ்டாலினும், சபரீசனும்தான் காரணம்; அன்புமணி புகார்