நேற்று சரிவு; இன்று உயர்வு: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 அதிகரிப்பு

1


சென்னை: சென்னையில் இன்று (ஏப்ரல் 18) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1200 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 880 ரூபாய்க்கும், கிராமுக்கு 150 ரூபாய் அதிகரித்து 14,360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக சர்வதேச நிலவரங்களால் தங்கம் விலை ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 16) ஆபரண தங்கம் கிராம் 14,360 ரூபாய்க்கும், சவரன் 1,14,880 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 275 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்றைய நிலவரம்



நேற்று (ஏப்ரல் 17) தங்கம் விலை கிராமுக்கு 150 ரூபாய் குறைந்து, 14,210 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 1,200 ரூபாய் சரிவடைந்து, 1,13,680 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம், 275 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இன்றைய நிலவரம்



இந்நிலையில் இன்று (ஏப்ரல் 18) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1200 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 880 ரூபாய்க்கும், கிராமுக்கு 150 ரூபாய் அதிகரித்து 14,360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியும் அதிகரிப்பு



வெள்ளி விலை கிராமுக்கு 5 ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 280 ரூபாய்க்கும், கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் அதிகரித்து 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்

Advertisement