பாமக குழப்பங்களுக்கு ஸ்டாலினும், சபரீசனும்தான் காரணம்; அன்புமணி புகார்
சேலம்: ''கடந்த ஒராண்டு காலம் பாமகவில் நடக்கிற குழப்பங்களுக்கு ஸ்டாலினும், அவரது மருமகன் சபரீசனும்தான் காரணம். இவர்கள் மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எங்கள் குடும்பத்தில் திட்டமிட்டு குழப்பம் செய்திருக்கிறார்கள் '' என பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.
எவ்வளவு வன்மம்
சேலத்தில் நடந்த கூட்டத்தில் அன்புமணி பேசியதாவது: இபிஎஸ் முதல்வராக வந்தால் தான் பாலியல் சம்பவம் தமிழகத்தில் நடக்காது. அண்ணா, எம்ஜிஆர். ஜெயலலதா, இபிஎஸ் போன்றவர்கள் ஆட்சியில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததில்லை. சின்ன பிஞ்சுக் குழந்தைகளை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவமே நான் கேட்டது கிடையாது.
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும், கஞ்சா, அபின், போதைப்பொருள், மாத்திரை, பவுடர், அமெரிக்காவில் பயன்படுத்தும் போதைப்பொருள்கள் எல்லாம் இப்போது கிராமங்களில் பயன்படுத்துகிறார்கள். பெண்களுக்கு மட்டுமல்ல உங்கள் பேரனுக்கும் ஆபத்து வரும்.
ஸ்டாலின் ஆட்சியில் ஒரு பக்கம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இன்னொரு பக்கம் பார்லியில் மகளிர் இடஒதுக்கீட்டு சட்ட நகலை ஒரு முதல்வர் எரிக்கின்றார் என்றால் இதை விட தேச துரோகச் செயல் வேறு இருக்க முடியும். அவருக்கு பெண்கள் மீது எவ்வளவு வன்மம்.
இந்த இருவர் தான்
தொடக்கத்தில் ஸ்டாலின் பிரசாரத்தில் சாதனைகள் பற்றி பேசினார், எடுபடவில்லை. அதன் பிறகு பாஜ வந்துவிடும் என்றார். அதுவும் எடுபடவில்லை. இப்போது இபிஎஸ் பற்றியும் என்னைப் பற்றியும் இழிவாகப் பேசுகிறார்கள். கடந்த ஒராண்டு காலம் பாமகவில் நடக்கிற குழப்பங்களுக்கு ஸ்டாலினும், அவரது மருமகன் சபரீசனும்தான் காரணம்.
இவர்கள் மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எங்கள் குடும்பத்தில் திட்டமிட்டு குழப்பம் செய்திருக்கிறார்கள். அதை எல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த கேடு கெட்ட ஊழல் ஆட்சியை அகற்றுங்கள். இபிஎஸ்ஐ முதல்வர் ஆக்குங்கள். இவ்வாறு அன்புமணி பேசினார்.
பாஜக மற்றும் பிற தேசிய கட்சிகள், பாமக மற்றும் நடிகர்களின் கட்சிகள் தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் ஒருபோதும் அனுமதிக்கப்படக்கூடாது. குறிப்பாக பாஜக இங்கிருந்து வேரோடு பிடுங்கப்பட வேண்டும்.
செலிபிஸ்
பாஜக கூட்டணியில் சேர்ந்ததன் விளைவு தான் இது!
உண்மை...திமுக காரன் ஓட்டுக்காக எதையும் செய்வான் என்று ஈவேரா கூறியது. இதுவும் ஒன்று...
உங்க சொந்த புத்தி எங்கே சார் போச்சு
Anbumani sir haven't you hear the brutal pollachi incident
ஐயாவும் மகனும் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவங்கோ.
அப்பாவுக்கே ஒட்டு கேட்கும் கருவி வெச்ச மிக பாசக்கார நல்லவன் இவன்
இப்படி ஒரு இழிபிறவி இந்த உலகத்திலுண்டோ ?
அன்புமணி அப்பா ராமதாஸ் அவர்கள் கண்ணின் விட்டு அழுதுகொண்டு இருக்கிறர்.மேலும்
-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும்; வசந்தம் கார்த்திகேயன் உறுதி
-
பா.ஜ., விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் புவனேஸ்வரி தி.மு.க., வில் ஐக்கியம்
-
நல்லாட்சி அமைய அ.தி.மு.க., வுக்கு வாக்களியுங்கள்; வேட்பாளர் குமரகுரு பேச்சு
-
அனுமதியின்றி சைக்கிள் பேரணி: த.வெ.க., வேட்பாளர் மீது வழக்கு
-
சேவை செய்ய வாய்ப்பு தாருங்கள் : பா.ம.க., வேட்பாளர் செழியன் வேண்டுகோள்
-
பணத்தை வீசி சென்ற கட்சியினர் கள்ளக்குறிச்சி போலீசார் விசாரணை