நடிகர் சத்யராஜ் குடும்பத்தினர் நடத்தும் அரசியல் நாடகம்: அப்பா, மகள் திமுக., மகன் தவெக.,
சென்னை : ஒரு புறம் நடிகர் சத்யராஜ் மற்றும் அவரது மகள் திவ்யா ஆகியோர் திமுக.,வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கின்றனர். இன்னொரு புறம் அவரது மகனும் நடிகருமான சிபிராஜ், தவெக.,வின் விஜய்க்கு ஆதரவு திரட்டுகிறார்.
தமிழகத்தில் தேர்தல் களம் இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. நாளை மறுநாள் தேர்தல் நடக்கும் சூழலில் இன்றுடன் பிரசாரம் ஓய்கிறது. திமுக.,வுக்கு ஆதரவாக நடிகர் சத்யராஜ் தமிழகத்தில் பல இடங்களில் பிரசாரம் செய்தார். அதே போல் அவரது மகளான திவ்யா திமுக.,வில் தான் உள்ளார். அவரும் திமுக., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.
இந்நிலையில் தன்னை எப்போதும் விஜய் ரசிகராக காட்டிக் கொள்ளும் சத்யராஜின் மகனான சிபிராஜ் இந்தமுறை தேர்தல் களத்தில் உள்ள விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். நேரடியாக பிரசாரத்திற்கு செல்லாவிட்டாலும் இன்ஸ்டா போன்ற வலைதளங்களில் அவரது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி உள்ளார். குறிப்பாக சிங்காநல்லூர் வேட்பாளர் கிரிபிரசாத், வேளச்சேரி வேட்பாளர் குமார் ஆகியோருக்கு ஆதரவு திரட்டினார். அவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள், நிச்சயம் நல்லது நடக்கும் என பேசி வீடியோ வெளியிட்டு உள்ளார்.
மேலும் விஜய்க்கு ஆதரவாக சிபி கடிதம் ஒன்றையும் எழுதி உள்ளார். அதில், ‛‛அன்புள்ள விஜய் அண்ணாவிற்கு.... 1993, அக்., 3 அன்று தான் நான் உங்களை முதன்முதலில் சந்தித்தேன். பொள்ளாச்சி ஹோட்டல் மொட்டை மாடியில் அப்பாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள எஸ்.ஏ.சி மற்றும் விஜயகாந்த் ஆகியோருடன் நீங்கள் வந்திருந்தீர்கள். அந்த எளிமையான இளைஞன் எதிர்காலத்தில் என் இதயம் உட்பட கோடிக்கணக்கான இதயங்களை வென்று, ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுப்பார் என்று அப்போது எனக்குத் தெரியாது.
நீங்கள் இனி நடிக்கப் போவதில்லை என்ற உண்மையை எங்களால் இன்னும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இருந்தாலும் ஒரு ரசிகனாக, நடிகனாக, சகோதரனாக மற்றும் நண்பனாக உங்கள் புதிய பாதைக்கான முடிவை மதிக்க வேண்டியது அவசியம். நான் எப்போதும் உங்களுக்கு துணையாக இருப்பேன்.
உங்களது வெற்றிகளை எனது சொந்த வெற்றியைப் போலவே நான் ரசித்து கொண்டாடினேன். கடந்த காலங்களில் உங்களுடன் நான் செலவிட்ட தனிப்பட்ட தருணங்கள், உணவு சாப்பிட்டது, போன் செய்தாலோ அல்லது குறுஞ்செய்தி அனுப்பினாலோ நீங்கள் உடனடியாக அளிக்கும் பதில்கள் இவை அனைத்தும் என் வாழ்வின் போற்றத்தக்க நினைவுகள்.
நான் சினிமா பின்னணியில் இருந்து வந்தாலும், நான் சினிமா உலகிற்குள் நுழைய நீங்களே உந்துதலாக இருந்தீர்கள். உங்கள் படங்கள் பொழுதுபோக்காக பார்க்கப்பட்டாலும், அவை எனக்கு உண்மையான அன்பு, நட்பு, தன்னம்பிக்கை, சுயமரியாதை, முடிவெடுக்கும் திறனை கற்றுக்கொடுத்தன.
'ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்ச நானே கேட்க மாட்டேன்' - இது வெறும் சினிமா வசனம் மட்டுமல்ல, நீங்கள் வாழும் தத்துவம் என்பதையும், எங்களை அவ்வாறு வாழத் தூண்டும் மந்திரம் என்பதையும் பல ஆண்டுகளாக நாங்கள் உணர்ந்துள்ளோம்.
இவ்வாறு சிபி கூறியுள்ளார்.
‛‛இப்படி சத்தியராஜ் குடும்பத்தில் ஆளுக்கு ஒரு கட்சிக்கு ஆதரவாக இருப்பது நல்ல பிசினஸ் டெக்னிக். பிழைக்க தெரிந்தவர்கள்'' என்று சினிமா வட்டாரத்தில் விமர்சனம் செய்கின்றனர்.
இதெல்லாம் ஒரு குடும்பம்... கர்மம் கர்மம்
சத்யராஜ் குடும்பம் ஒரு மால் மாதிரி எல்லாம் கிடைக்கும்
வீட்டில் சாமிப்படங்களை வைத்து வழிபட்டுக்கொண்டு, அவர்களது வீட்டில் எல்லா சடங்குகளையும் இந்து சம்பிரதாயப்படி நடத்திக்கொண்டு, வெளியே மட்டும் நாறவாய் நாத்திகம்... அதுவும் இந்து மதத்தை மட்டும் இழிவுபடுத்தி நாத்திகம் பேசும் சமூகவிரோதி சத்தியராஜின் குடும்பம். செல்தட்டி சவக்குமார், சமூகவிரோதி சத்யராஜ் போன்றவர்கள் கோவைக்கே களங்கம், கரும்புள்ளிகள்.
அப்பாவும் மகனும் ஒரே மாதிரி சிந்திக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. மோடியின் சகோதரர் மோடியை ஆதரிக்கிறாரா. ராகுல் காந்தியின் பங்காளியான வருண் காந்தி பாரதிய ஜனதாவில் இருக்கிறார் அது நாடகமா. குமரி ஆனந்தன் காங்கிரசில் இருந்த பொழுது தமிழிசை பாரதிய ஜனதாவில் இருந்தார் அது நாடகமா
சத்யாவின் மகள் மணம் புரிந்து கொள்ளாதது வியப்பளிக்கிறது ........
பொம்பள சத்தியராஜை எவன் மணப்பான்..?
சத்யராஜ் ஒரு மோசடிக்காரன் மற்றும் திருடன். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களில் அவனும் ஒருவன். அவன் தமிழ்நாட்டிற்கு ஒரு சாபக்கேடு.
சத்தியராஜ் பொண்ணு ஸ்டாலினை அப்பா என்று கூப்பிடுவாளா ?
அவருக்கு இரண்டு குழந்தைகள் மட்டுமே இன்னும் இரண்டு குழந்தைகள் இருந்திருந்தால் ஒருவர் நாம் தமிழராகவும் ,இன்னொருவர் ஏ டி எம் கே வில் பிரச்சாரம் செய்திருப்பார்களா .இதுதான் ஹிந்துயிசம் போதிக்கும் சமதர்மம் .
This is an old trick. In the late 1960s, many members of same family were in DMK, Congress, Communist and so on. The simple logic is, NO MATTER what rules come, political influence is wielded by a family member attached to that party and got all problems resolved. This formula is still followed in many families.
surprised why sathyaraj left admk so that anybody comes to power their family will enjoyமேலும்
-
அ.தி.மு.க., வெற்றி தெளிவாக தெரிகிறது: கோகுல இந்திரா
-
செய்யூர் தாசில்தார் அலுவலகத்தில் மின்தடை: பொதுமக்கள் அவதி
-
ஊழலற்ற ஆட்சியை விஜய் தருவார்:P த.வெ.க., வேட்பாளர் பிரபாகர் பேச்சு
-
இருசக்கர வாகன அணிவகுப்பில் ஓட்டு சேகரித்தார் சிற்றரசு
-
அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா
-
தவறான சிகிச்சையால் இளம்பெண் இறப்பு? மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை!