திரவுதியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

திருத்தணிதிருத்தணி திரவுபதியம்மன் கோவிலில் நேற்று முதல்கால ஹோமத்துடன் மகா கும்பாபிஷேக விழா துவங்கியது.

திருத்தணியில் உள்ள திரவுபதியம்மன் கோவிலின் திருப்பணிகள் ஒரு மாதமாக நடந்து வந்தது. தற்போது திருப்பணிகள் முடிந்து நேற்று மாலை கணபதி மற்றும் நவகிரக ஹோமத்துடன் துவங்கியது.

இதற்காக கோவில் வளாகத்தில், 5 யாகசாலைகள் அமைத்தும், கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், வாஸ்து பூஜை நடந்தது. தொடர்ந்து, 108 கலசங்கள் வைத்து முதல் மற்றும் இரண்டாம் கால யாக சாலை பூஜை நடந்தது.

இன்று மதியம், மூன்றாம் கால பூஜையும், இரவு, நான்கு கால பூஜையும், நாளை காலை. 9:00 மணிக்கு மகா கும்பாபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து உற்சவர் அம்மன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

★★

Advertisement