தாமதம் - கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதில்- முல்லைப் பெரியாற்றில் கலக்கும் கழிவு நீரால் பாதிப்பு
கூடலுார்:முல்லைப் பெரியாற்றின் கரையோரப் பகுதிகளில் கலக்கும் கழிவு நீரை தடுப்பதற்காக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதில் மெத்தனம் காட்டி வருவதால் கிராம மக்கள் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.
பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் லோயர்கேம்பில் துவங்கி கூடலுார், கம்பம் வழியாக செல்லும் முல்லைப் பெரியாற்றில் ஓடி வைகை அணையில் கலக்கிறது. குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் பல இடங்களில் நேரடியாக ஆற்றில் கலக்கிறது. ஆற்றில் இருந்து பம்பிங் செய்து கரையோரப் பகுதியில் உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணதேவன்பட்டி, ஆங்கூர்பாளையம் உள்ளிட்ட பல கிராமங்களில் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. கழிவுநீர் கலந்த குடிநீரை சப்ளை செய்வதால் மக்கள் தொற்று நோயால் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் ஆற்றில் குறைவாக தண்ணீர் வரும்போது கழிவு நீரால் பாதிப்பு அதிகமாகிறது.
இடத்தேர்வில் நிலவும் சிக்கல்:
இதனை தடுக்கும் வகையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கூடலுார் நகராட்சி சார்பில் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இடம் தேர்வு செய்வதில் ஏற்பட்ட குளறுபடியால் ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்த முடியாமல் வீணாகியது. இந்நிலையில் இரண்டாவது முறையாக சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு கூடலுார் காந்திகிராமத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதுவும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆற்றில் கழிவுநீர் நேரடியாக கலப்பு கிராம மக்கள் கூறியதாவது:
முல்லைப் பெரியாற்றில் கூடுதலாக தண்ணீர் வரும்போது கழிவு நீர் கலப்பதால் பிரச்னை ஏற்படவில்லை. தற்போது ஆற்றில் 50 அடி கன அடி நீர் கூட வரவில்லை. இதில் கழிவுநீர் கலப்பதால் நேரடியாக பம்பிங் செய்து குடிநீருக்கு பயன்படுத்தும் போது பெரிதும் பாதிக்கப்படுகின்றோம். ஒவ்வொரு கிராம சபை கூட்டங்களிலும் மக்கள் தெரிவித்த இக்கோரிக்கையை முன்வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒரு முறை கலெக்டர் ரஞ்ஜீத் சிங் கருநாக்கமுத்தன்பட்டி கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட போது, கழிவு நீர் கலந்த குடிநீரை நேரடியாக காட்டினோம். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறிச் சென்றார். ஆனால் இதுவரை இதற்கான தீர்வு கிடைக்கவில்லை. வேட்பாளர்கள் எத்தனையோ வாக்குறுதிகள் அளித்தாலும் சுத்தமான குடிநீரை வழங்குவதற்கான உத்தரவாதத்தை அளிப்பதில்லை.
மேலும்
-
சிறைகளில் அடைக்கப்பட்டவர்கள் ஓட்டளிக்க முடியாது; ஐகோர்ட் உத்தரவு
-
தமிழகத்தில் நாளை தேர்தல்; ஓட்டுச்சாவடியில் நீங்க செய்ய வேண்டியது இதுதான்!
-
கோவை தெற்கில் தேர்தலை நிறுத்தக்கோரி அதிமுக வேட்பாளர் தர்ணா; கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
-
போதை இளைஞர்களை நல்வழிப்படுத்த வாய் திறக்காத விஜய்: பதறும் பெற்றோரின் பரிதவிக்கும் கேள்வி!!
-
தமிழகத்தில் இதுவரை ரூ.1262 கோடி பணம், பரிசுப்பொருட்கள் பறிமுதல்
-
ஓட்டுப்போட வந்த 3 பேர் பலி; ஓசூர் அருகே கோர விபத்து