வேலை செய்யாவிடில் வெளியேறலாம் அதிகாரிக்கு ம.ஜ.த., - எம்.எல்.ஏ., 'டோஸ்'
முல்பாகல்: மக்கள் கோரிக்கை மனு மீது கவனம் செலுத்தாமல், அலட்சியம் காட்டிய முல்பாகலின் தாய்லுார் கிராம வளர்ச்சி அதிகாரியை, முல்பாகல் தொகுதி ம.ஜ.த., - எம்.எல்.ஏ., சம்ருத்தி மஞ்சுநா த் கண்டித்தார்.
முல்பாகல் தாய்லுார் கிரா மத்தில், 'ஜனஸ் பந்தனா' என்ற, கிராம மக்களின் குறைகேட்பு நிகழ்ச்சி, ம.ஜ.த., - எம்.எல்.ஏ., சம்ருத்தி மஞ்சுநாத் தலைமையில் நடந்தது.
கிராம மக்கள், 78 கோரிக்கை மனுவை அளித்திருந்ததாகவும், அதில் பல மனுக்களை, கிராம வளர்ச்சி அதிகாரி சீனிவாச ரெட்டி கவனிக்காமல் அலட்சியம் காட்டியதாகவும், எம்.எல்.ஏ.,விடம் கிராம மக்கள் சரமாரியாக புகார் அளித்தனர்.
குறிப்பாக கிராமத்தின் மயான நிலம் ஆக்கிரமிப்பு, வடிகால் வசதி, சுகாதாரம், குடிநீர் பிரச்னைகள் குறித்த கோரிக்கைகளில் அலட்சியம் காண்பித்தததாகவும் தெரிவித்தனர்.
இதைக்கேட்ட சம்ருத்தி மஞ்சுநாத், ''அரசு அதிகாரியாக இங்கு உங்களுக்கு வேலை செய்ய விருப்பமில்லை என்றால், தாராளமாக வெளியேறலாம். எனக்கு அதிகாரிகள் ஒன்றும் முக்கியம் இல்லை. கிராம மக்கள் நலன் தான் முக்கியம்;
' 'அலட்சிய போக்கை கைவிட வேண்டும். கிராம வளர்ச்சியில் அக்கறை செலுத்த வேண்டும். தாய்லுார் மக்கள், மிக பொறுமையானவர்கள். கிராம வளர்ச்சி சீ ர்கெட்டு உள்ளது. இதனை சரிப்படுத்த வேண்டும். குறிப்பாக மயான ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டு ம்,'' என்றார்.
முல்பாகல் தாசில்தார் வி.கீதா, கிராம பஞ்சாயத்து அதிகாரி பாபு, வருவாய்த் துறை அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
ரோடு புதுப்பித்தல் பணி :அதிகாரிகள் குழு ஆய்வு
-
கே.எம்.சி.எச்., மருத்துவமனை தலைவருக்கு கவுரவ விருது
-
கோவை மாவட்டம் பிரசாரம்
-
தி.மு.க. நல்லாட்சி தொடர உதயசூரியனை மறவாதீர்: வேட்பாளர் செல்வராஜ் வேண்டுகோள்
-
மாணவர்கள், மகளிருக்காக ஏராளமான திட்டங்கள்: தி.மு.க. வேட்பாளர் தினேஷ்குமார் பெருமிதம்
-
களமிறங்காமல் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்கள்