ஓடும் பஸ்சில் மாரடைப்பு: 50 பயணிகளை காப்பாற்றி தனியார் பஸ் டிரைவர் மரணம்
குளித்தலை, குளித்தலையில், ஓடும் பஸ்சில் டிரைவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், 50-க்கும் மேற்பட்ட பயணிகளை காப்பாற்றிய பின், டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த மேட்டுமருதுார் கிராமத்தை சேர்ந்தவர் மனோஜ், 37. இவர் குமரன் தனியார் பஸ்சில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் மதியம், கரூரிலிருந்து திருச்சி நோக்கி பஸ்சில் வந்தபோது, குமாரமங்கலம் தனியார் பெட்ரோல் பங்க் அருகே திடீரென மனோஜூக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சுதாரித்து கொண்டு, விபத்து
ஏற்படாத வகையில் சாலையோரமாக பஸ்சை நிறுத்திய அவர், இருக்கையிலே மயங்கி விழுந்தார். பஸ்சில் பயணம் செய்த பயணிகள், நடத்துனர்ஆகியோர் டிரைவர் மனோஜூக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர், குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இரவு உயிரிழந்தார்.
குளித்தலை போலீசார் மனோஜ் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த டிரைவர் மனோஜூக்கு, மனைவி கண்மணி மற்றும் இரு மகன்கள் உள்ளனர்.
குளித்தலை போலீசார் விசாரணை நடத்தி
வருகின்றனர்.
மேலும்
-
அதிமுக ஆட்சி அமைந்தால் அரசு கேபிள் டிவி கட்டணம் 50 சதவீதமாக குறைப்பு; இபிஎஸ் அறிவிப்பு
-
தாமதம் - கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதில்- முல்லைப் பெரியாற்றில் கலக்கும் கழிவு நீரால் பாதிப்பு
-
பள்ளி ஆண்டு விழா
-
ஓட்டுச்சாவடி அலுவலர்கள், போலீசாருக்கு பணிஒதுக்கீடு
-
விடுதி வசதியுடன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி: உசிலம்பட்டி காங்., வேட்பாளர் சரவணகுமார் உறுதி
-
தேர்தலுக்கு கட்சி கொடி கட்டாத முன்மாதிரி கிராமம் :45 ஆண்டுகளாக கிராமத்தில் தொடரும் கட்டுப்பாடு