குமரியில் நாளை ராகுல் பிரசாரம்
நாகர்கோவில்: காங்., --- தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், நாளை கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசாரம் செய்கிறார்.
தி.மு.க., கூட்டணி சார்பில், கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்., வேட்பாளர்களாக குளச்சல் -- தாரகை கத்பர்ட், கிள்ளியூர் - ராஜேஷ்குமார், விளவங்கோடு -- பிரவீன் ஆகியோரும்; தி.மு.க., வேட்பாளர்களாக நாகர்கோவில் -- ஆஸ்டின், கன்னியாகுமரி -- மகேஷ் ஆகியோரும்; மார்க்சிஸ்ட் வேட்பாளராக பத்மநாபபுரத்தில் செல்லசாமியும் போட்டி யிடுகின்றனர்.
இவர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக, காங்., -- எம்.பி., ராகுல் நாளை காலை திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் வாயிலாக, குளச்சல் தொகுதியில் உள்ள லட்சுமிபுரம் கல்லுாரி மைதானத்திற்கு வருகிறார்.
அங்கு நடக்கும் பொதுக் கூட்டத்தில், காங்., -- தி.மு.க., மார்க்சிஸ்ட் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் பேசுகிறார்.
மேலும்
-
கோவை தெற்கு தொகுதி தேர்தல் நிறுத்த வாய்ப்பு; அதிகாரிகள் மத்தியில் பரபரப்பு
-
படித்தவனுக்கு மதிப்பில்லை; நடிக்கிறவனுக்கு தான் மதிப்பு; பிரசாரத்தில் சீமான் ஆவேசம்
-
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து; உரிமையாளர் கோர்ட்டில் சரண்
-
நடிகர் சத்யராஜ் குடும்பத்தினர் நடத்தும் அரசியல் நாடகம்: அப்பா, மகள் திமுக., மகன் தவெக.,
-
இந்தியா எதையும் மறக்காது; பஹல்காம் சம்பவத்தை நினைவு கூர்ந்த ராணுவம்
-
பாமக குழப்பங்களுக்கு ஸ்டாலினும், சபரீசனும்தான் காரணம்; அன்புமணி புகார்