மணல் கொள்ளையில் ரூ.5,000 கோடி சம்பாதித்த திமுக எம்எல்ஏக்கள்: ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
தென்காசி: திமுக எம்எல்ஏக்கள் மணல் கொள்ளை மூலம் ரூ.5,000 கோடி சம்பாதித்து உள்ளனர் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தொகுதியில் களமிறங்கும் பாஜக வேட்பாளர் ஆனந்தன் அய்யாசாமியை ஆதரித்து, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ரோடுஷோ நடத்தினார். அவர் தேர்தல் பிரசாரத்தில் பேசியதாவது: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததற்கு முதல்வரும், அவரது மகனுமே காரணம். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் மக்கள் உயிரிழந்தது திமுகவின் அரசின் அலட்சியத்தாலேயே நடந்தது.
திமுக எம்எல்ஏக்கள் மணல் கொள்ளை மூலம் ரூ.5,000 கோடி சம்பாதித்து உள்ளனர். திருப்பரங்குன்றத்தில் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படும். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை திமுக, காங்கிரஸ் தடுத்துவிட்டன. மசோதா மீண்டும் நிறைவேற்றப்படும்.
நிதி மக்களுக்கு செல்லவில்லை. திமுகவினருக்கே சென்றுள்ளது. திமுகவினரின் ஊழல் பணம் மீட்டெடுக்கப்படும். தேஜ கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் பெண்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். தூத்துக்குடி துறைமுகம் நவீனப்படுத்தப்படும். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்
வாசுதேவநல்லூர் தொகுதியில் ராஜ்நாத் சிங் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். தினமலர் யூடியூப் உள்ளிட்ட இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
லைவ் வீடியோ பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
நீங்கள் ரஃபேல் விமான பேரத்தில் அடித்ததை விட குறைவு தான்!
20 அடிக்கு மணல் அள்ளலாம் என்றால் 60 அடிக்கு அள்ளினால் ஒண்ணும் செய்ய முடியாது. அடுத்த நாள் வேறு மண்ணை கொண்டு நிரப்புவார்கள். கேள்வி கேட்ட அதிகாரிக்கு மேல் லோக டிக்கெட் உறுதி. இரவில் 100 லாரிகள் போயி ஆறே சுரண்டப்படும். அரசாங்க ரத்து 500 ரூபாய் டோக்கன் என்றால் உண்மை விலை 3000/-
கன்யாகுமரி பகுதிகளில் தோரியம் என்ற தாது மண் பல லக்ஷம் டன் எடுக்கப்பட்டு வெளி நாடு செல்கிறது. எவர் கேட்பார். கேட்டவனுக்கு வளைந்து கொடுப்பவனுக்கு பணம் கைமாறும். அதிகாரி நியாயமாக இருந்தால் கையே இருக்காது. இது தான் இன்றய அரசியல் உண்மை.
நடவடிக்கை எடுடுக்கும் இடத்தில இருந்துகொண்டு இப்படி பேசுவதால் கூட்டு களவாடி என்றுதான் தோன்றுகிறது
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது கள்ள சாராய மரணம், ரூ. 5000 கோடி மணல் கொள்ளை அப்படி என்றால் ஏன் திமுக ஆட்சியை கலைக்க வில்லை. இதுவரை ஆட்சி செய்து என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்.
இப்ப மணல் கொள்ளையில் ரூ.5,000 கோடி திமுக எம்எல்ஏக்கள் சம்பாதித்தனராம். ஆதாரம் இருக்கிறதா? ஆதாரம் இருந்தால் கைது பன்னும்கள். ஆதாரம் இல்லாமல் ஒரு மிக பெரிய நாட்டின் மிக முக்கிய பொறுப்பில், நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக இருந்துகொண்டு வாய்க்கு வந்தபடி உளறக்கூடாது. மத்திய அரசு இப்போது யாரிடம் இருக்கிறது? பிஜேபி யிடமா அல்லது காங்கிரசிடமா?
ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை என்பது போல் உள்ளது!
Sand mafia quite prevalent Pan India including Gujarat, M P, U P and Rajasthan etc. Gujarat minister uin Modi regime convicted by courts for sand/Salt mafia . Bjp also corrupt party considering electoral bond case. Pot blames the kettle.
பிடிச்சி உள்ள வைக்க வேண்டிது தானே ....
கொள்ளை அடிப்பது தெரிந்து ஏன் விட்டு வைக்கிறீர்கள்.? நாலு பேர் உள்ளே போனால் அடங்குவார்கள் நீங்கள் சும்மா இருப்பது ஏன்?மேலும்
-
அதிமுக ஆட்சி அமைந்தால் அரசு கேபிள் டிவி கட்டணம் 50 சதவீதமாக குறைப்பு; இபிஎஸ் அறிவிப்பு
-
தாமதம் - கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதில்- முல்லைப் பெரியாற்றில் கலக்கும் கழிவு நீரால் பாதிப்பு
-
பள்ளி ஆண்டு விழா
-
ஓட்டுச்சாவடி அலுவலர்கள், போலீசாருக்கு பணிஒதுக்கீடு
-
விடுதி வசதியுடன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி: உசிலம்பட்டி காங்., வேட்பாளர் சரவணகுமார் உறுதி
-
தேர்தலுக்கு கட்சி கொடி கட்டாத முன்மாதிரி கிராமம் :45 ஆண்டுகளாக கிராமத்தில் தொடரும் கட்டுப்பாடு