வி.புதுப்பாளையம் கிராமத்தில்கோவில் கும்பாபிேஷக விழா   

விழுப்புரம்: வளவனுார் அடுத்த வி.புதுப்பாளையம் திரவுபதியம்மன், முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் நடைபெற்றது.

விழுப்புரம் தாலுகா, வளவனுார் அடுத்த வி.புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள விநாயகர், எல்லையம்மன், முத்துமாரியம்மன், திரவுபதியம்மன், காளி அம்மன் கோவில் புனரமைக்கப்பட்டு, கும்பாபிேஷகம் நடைபெற்றது.

இதையொட்டி, கடந்த 17 ம் தேதி மாலை விக்னேஷ்வர பூஜை, 18 ம் தேதி நவக்கிரக ேஹாமம், கலச பூஜை, பூர்ணாஹுதி மகா அபிேஷகம் நடைபெற்றது. தொடர்ந்து 19ம் தேதி யாக பூஜைகள், ேஹாமங்கள் நடைபெற்றது. காலை 9:00 மணி முதல் 10:30 மணிக்குள் விமான கும்பாபிேஷகம் மற்றும் பரிவார கும்பாபிேஷகம், கருவறை சுவாமிகளுக்கு மகா கும்பாபிேஷகம் நடைபெற்றது.

பகல் 12:00 மணிக்கு அன்னதானம், இரவு மின் அலங்காரத்தில் சுவாமி வீதியுலா, தெருகூத்து நடைபெற்றது.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Advertisement