குட்டை நீரில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை, தேவகாய்பட்டியை சேர்ந்த தேவராஜ் மகன் காமேஷ், 13; பனங்காட்டுப்பட்டியை சேர்ந்த பரமசிவம் மகன் வர்ணிஷ், 13; ஆலந்துார் நாடு பலாப்பாடியை சேர்ந்த சுரேஷ் மகன் ஹரிகரன், 13.

இவர்கள் மூவரும், செம்மேட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், 8-ம் வகுப்பு படித்தனர். நேற்று காமேஷ், வர்ணிஷ், ஹரிகரன் மூவரும், ஆலந்துார் பலாப்பாடிக்கு சென்றனர்.

அங்கு பாறைக்குழியில் உள்ள குட்டையில் குளித்தனர்.

இதில் மூவரும், தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

Advertisement