ஹலசூரு பான் பெருமாள் கோவிலில் நாளை விழா

ஹலசூரு: பெங்களூரு ஹலசூரு பஜார் தெருவில் பிரசித்தி பெற்ற, பான் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ராமானுஜர் சித்திரை திருவாதிரை உத்சவம் நாளை நடக்கிறது.

காலை 8:30 மணி முதல் இரவு 10:30 மணி வரை ராமானுஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. மாலை 5:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை திவ்ய பிரபந்தம் சேவா காலம், சாத்துமுறை நடக்கிறது.

மஹா மங்களராத்தியை தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு, ராமானுஜர் ஆசியை பெற்று செல்ல வேண்டும் என்று, கோவில் அர்ச்சகர் விஷ்ணு சுதன் பட்டர் அழைப்பு விடுத்து உள்ளார்.

தொடர்புக்கு: 94811 84833, 94492 55373

Advertisement