அமுலு பொன்மலரை ஆதரித்து இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம்
மதுராந்தகம்:மதுராந்தகம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் அமுலு பொன்மலரை ஆதரித்து, நகராட்சி பகுதிகளில், தி.மு.க., நிர்வாகிகள் துண்டு பிரசுரம் வழங்கி, பிரசாரத்தை நிறைவு செய்தனர்.
மதுராந்தகம் சட்டசபை தொகுதி தி.மு.க., வேட்பாளர் அமுலு பொன்மலரை ஆதரித்து, மதுராந்தகம் நகரில் உள்ள மோச்சேரியில், நகராட்சி துணைத் தலைவர் சிவலிங்கம் தலைமையில், பெண்கள், தி.மு.க., நிர்வாகிகள், மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம், உங்களுடன் ஸ்டாலின் உள்ளிட்ட அரசின் சாதனைகளை விளக்கி கூறி, உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தனர்.
இந்நிகழ்வில் கிளை செயலர்கள், மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.
அதேபோன்று, அச்சிறுபாக்கம் தெற்கு ஒன்றிய செயலர் ஒரத்தி கண்ணன் தலைமையில், எலப்பாக்கம், கடமலைபுத்துார், முருங்கை, ஒரத்தி உள்ளிட்ட கிராமங்களின் முக்கிய வீதிகளில், வேட்பாளர் அமுலு பொன்மலருக்கு ஓட்டளிக்க கோரி சூறாவளி பிரசாரம் செய்தனர்.
மேலும்
-
சூப்பர் ஓவரில் லக்னோவை வீழ்த்தியது கோல்கட்டா அணி
-
ஒருமுனை மின்சாரத்தால் சிகிச்சைகள் தாமதம்
-
இடியும் நிலையில் வி.ஏ.ஓ., அலுவலகம்
-
ரோட்டோர பள்ளத்தால் விபத்து அபாயம்
-
'கனெக் ஷன்' கொடுத்தா 'கலெக் ஷன்' :மதுரையில் எக்ஸ்பிரஸ் - பாசஞ்சர் ரயில்களுக்கு இடையே * நேரடி ரயில் சேவை இல்லாத ஊர்களுக்கு இணைப்பு வசதி
-
மயங்கி விழுந்து கவுன்சிலர் பலி