செய்யூரை செழிக்க வைப்பதே என் வாழ்நாள் லட்சியம்: ராஜசேகர்
செய்யூர்: ''நான் எம்.எல்.ஏ., வாக தேர்வு செய்யப்பட்டால், செய்யூரை செழிக்க வைப்பதே என் வாழ்நாள் லட்சியமாக உள்ளது,'' என அ.தி.மு.க., வேட்பாளர் ராஜசேகர் வாக்குறுதி அளித்தார். செய்யூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், அ.தி.மு.க., வேட்பாளர் ராஜசேகர், நேற்று இறுதிக்கட்ட பிரசாரமாக, சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
பிரசாரத்தில் ராஜசேகர் பேசியதாவது:
செய்யூர் பகுதியில் சாலை, தண்ணீர், தெருவிளக்கு, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படாமல் உள்ளன.
100 நாள் வேலை முழுமையாக வழங்கப்படுவது இல்லை. விவசாயிகள், மீனவர்களுக்கு எந்தவித வளர்ச்சித் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை.
நான் எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டு, அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும், சாலைகள், குடிநீர் வசதி, தெருவிளக்குகள், பேருந்து, சுகாதாரமான கழிப்பறைகள், மயான மேம்பாடு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
செய்யூரில் உள்ள அரசு மருத்துவமனையின் தரம் உயர்த்தப்படும். மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்படும். விவசாயிகளின் வாழ்க்கை ரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். செய்யூர் பகுதியை செழிக்க வைப்பதே எனது வாழ்நாள் லட்சியமாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும்
-
'புதுச்சேரி - தமிழகத்தில் காங்கிரஸ் இரட்டை இலக்கத்தை தொடாது'
-
தேர்தல் கமிஷனில் பொற்கொடி முறையீடு
-
தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு துவக்கம்; ஓட்டளிக்க மக்கள் ஆர்வம்
-
திரு.வி.க., நகரில் ரவுடிகள் வலம்; தி.மு.க., வேட்பாளர் அலறல்
-
'பென்சில், பேனா, நோட்புக்' தொகுப்புடன் 'பூத்' கமிட்டியினருக்கு தலா ரூ.2,000
-
நா.த.க., மீது தேர்தல் விதிமீறல் வழக்கு