யாரையும் விமர்சித்து பேச விரும்பவில்லை: விஜய் தொகுதியில் ஸ்டாலின் பிரசாரம்
சென்னை: ''உங்கள் வீட்டு பிள்ளையாக இருந்து பணியாற்றுபவர் வேண்டுமா அல்லது எங்கிருந்தோ வந்து, நாடகம் நடிப்பவர் வேண்டுமா,'' என, பெரம்பூர் தொகுதியில் விஜய் பெயரை குறிப்பிடாமல், முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
சென்னையில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, முதல்வர் ஸ்டாலின் நேற்று பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது: சமீபத்தில், மத்திய பா.ஜ., அரசுக்கு பெரிய அடி விழுந்தது. மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், தொகுதி மறுவரையறை செய்ய, பார்லிமென்டில் மசோதா கொண்டு வந்தனர்.
தேர்தல் நேரத்தில் கொண்டு வந்தால், எம்.பி.,க்கள், சபைக்கு வர முடியாது என எண்ணினர். ஆனால், நமக்கு தேர்தல் முக்கியம் கிடையாது. தமிழகத்தின் உரிமையை பாதுகாப்பதே அவசியம்.
அதனால், அனைத்து எம்.பி.,க்களையும், பார்லிமென்ட் செல்ல அறிவுறுத்தினேன். ஓட்டெடுப்பில் அந்த மசோதா தோல்வி அடைந்தது. மத்திய அரசுக்கு கவுன்டவுண் தொடங்கி விட்டது.
பெரம்பூர் தொகுதி மக்களுக்கு ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். உங்கள் வீட்டு ஊழியனாக, உங்கள் வீட்டு பிள்ளையாக இருந்து பணியாற்றும் ஒருவர் வேண்டுமா அல்லது எங்கிருந்தோ புதிதாக அரசியலுக்கு வந்து, நாடகம் நடித்துக் கொண்டிருப்பவர் வேண்டுமா என, சிந்தித்து பாருங்கள்.
நான் யாரையும் அரசியலில் தாக்கியும், விமர்சித்தும் பேச விரும்பவில்லை. அந்த பழக்கமும் எனக்கு கிடையாது. யாரையும் எதிர்த்து, தரக்குறைவாக பேசும் வழக்கம் எனக்கு கிடையாது.
தி.மு.க., ஆட்சியில், தேர்தல் வாக்குறுதியில் 90 சதவீத பணிகளை முடித்து விட்டோம். மீதம் 10 சதவீதப் பணிகள் உள்ளன. ஏனெனில், மத்திய அரசு போதிய நிதியை விடுவிக்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
@block_B@ தில்லுமுல்லு செய்து டில்லியில் வெற்றி
டில்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவாலுடன் இணைந்து, திரு.வி.க.,நகரில் பிரசாரம் செய்த, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கெஜ்ரிவால், மிகப்பெரிய போராளி, எந்தவித அச்சுறுத்தலுக்கும் பயப்படாதவர். பா.ஜ.,வுக்கு எதிராக போராடி வருகிறார். இரண்டு முறை டில்லியில் முதல்வராக தேர்வு செய்யப்பட்டவர். மூன்றாவது முறையாகவும், வெற்றி பெற்றிருப்பார். ஆனால், திட்டமிட்டு வேண்டுமென்றே, அவரை முடக்க வேண்டும் என்பதற்காக, அவரின் தளபதிகளாக இருந்த பல அமைச்சர்களை கைது செய்தனர்.
அவர் மீது பொய் வழக்குகளை போட்டு, சிறையில் அடைத்தனர். ஆனால், ஆதாரம் இல்லை என, உச்ச நீதிமன்றம் அவரை விடுவித்தது. அந்த சூழலில், டில்லியில் தேர்தல் நடத்தி, அதிகாரத்தை பயன்படுத்தி, தில்லுமுல்லு செய்து பா.ஜ., வெற்றி பெற்றது. அது குறித்து கவலைப்படாமல் கெஜ்ரிவால், பா.ஜ.வை தொடர்ந்து எதிர்த்து வருகிறார். இவ்வாறு அவர் பேசினார். block_B
@block_G@எவ்வித 'ஈகோ'வும் இல்லாதவர் ஸ்டாலின்
ஒட்டுமொத்த தேசத்துக்காகவும் போராடி வரும் முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு எதிராக வலுவாக குரல் எழுப்புகிறார். தமிழக மக்களுக்காக அயராது பணியாற்றும் ஸ்டாலின், எவ்வித 'ஈகோ'வும் இல்லாதவர். அவர் கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்கள் ஒவ்வொன்றும், வேறு எந்த மாநிலத்திலும் இல்லாதவை.
தே.ஜ., கூட்டணி என்பது, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி கிடையாது; தே.ஜ., கூட்டணி என்றால், அது பா.ஜ., மட்டும்தான். பா.ஜ.வின் பிடியில் அ.தி.மு.க., உள்ளது. பீஹாரில் முதல்வராக இருந்த நிதிஷ்குமாருக்கு நேரிட்ட நிலையே, அ.தி.மு.க.,வுக்கு ஏற்படும். தமிழகத்தை கைப்பற்ற பா.ஜ., முயல்கிறது. எனவேதான், தமிழக மக்கள் பா.ஜ.,வை வெறுக்கின்றனர்.
ஓராண்டுக்கு முன்பு, பா.ஜ.,விற்கு ஓட்டளித்து, டில்லி மக்கள் ஒரு தவறை செய்தனர். நாங்கள் கொண்டுவந்த இலவச மின்சாரம், இலவச மருத்துவம், மாதிரி பள்ளி உள்ளிட்ட அனைத்து நலத்திட்டங்களையும் பா.ஜ., நிறுத்திவிட்டது.
-அரவிந்த் கெஜ்ரிவால், தலைவர், ஆம் ஆத்மி கட்சிblock_G
ஓட்டுரிமை வயதை 18ஆகக் குறைந்ததன் துர்பலனை இந்த தேர்தலில் அனுபவிக்கலாம்.
பின்னாடி கூட்டாட்சிக்கு உதவலாம்.
தரக்குறைவாக பேசுவதின் அடி நாதமே திமுக தான் என்பது தளபதி நன்றாக அறிந்த்துதான். தளபதிக்கு Mythomania , plutomamania இருப்பது மறந்து விட்டது.
வீட்டு பிள்ளை கொள்ளைக்காரனாக இருந்தால்?
ஊழல் கட்சியான தி.மு.கவிற்கு பிரச்சாரம் செய்து தானும் ஓர் ஊழல் கட்சியின் தலைவர்தான் என்பதை நிரூபித்து விட்டார் அரவிந்த் கெஜ்ரிவால்.
ராகுலுடன் ஒரே வாகனத்தில் ஸ்டாலின் சென்றிருந்தால் பலன் ஏதும் உண்டு. கெஜ்ரியுடன் சென்று என்ன பிரயோஜனம்?
யாரை எதிர்த்தும் தரக்குறைவாக பேசும் வழக்கம் தமக்குகிடையாதாம்? ஸ்டாலின் கூறுகிறார்! எடப்பாடி காலில் விழுந்தார், தவழ்ந்தார் என இது வரை எத்தனை நூறு முறை பேசி இருப்பீர்கள்? இதெல்லாம் தரக்குறைவு பேச்சு லிஸ்ட்ல வராதா அய்யா!
1970 பக்கமாக பத்ரிகையாளர்களை துரத்திய வழக்கு விக்கி லீக்ஸ் சொல்லுவதாக வீடியோ வருகிறதே அதுவும் பொய்யா ?மேலும்
-
மானாமதுரை சித்திரை திருவிழா; 28ம் தேதி திருக்கல்யாணம்
-
கண்மாய்களில் நாட்டு உடை மரங்கள் வளர்க்க எதிர்பார்ப்பு : வனத்துறைக்கு விவசாயிகள் வேண்டுகோள்
-
ஆஸ்திரேலிய ஆந்தை மீட்பு
-
சிவகங்கை மாவட்டம் நிகழ்ச்சிகள்
-
பஸ் ஸ்டாண்டிற்குள் கழிவுநீர் தேக்கம் :துர்நாற்றத்தால் பயணியர் பாதிப்பு
-
ஆஞ்சநேயர் கோவிலில் திருக்கல்யாண வைபவம்