ஜூலை 9, 10, 11ல் குஜராத்தில் பயணியர் வாகன கண்காட்சி

சென்னை: குஜராத்தின் காந்தி நகரில், பயணியர் வாகன கண்காட்சி வரும் ஜூலை 9, 10, 11ம் தேதிகளில் நடக்கிறது.

இது குறித்து, பி.ஓ.சி.ஐ., தலைவர் பிரசன்னா பட்வர்தன், துணை தலைவர் அப்சல், ஒருங்கிணைப்பாளர் மாறன் ஆகியோர் கூறியதாவது:

பி.ஓ.சி.ஐ., எனப்படும் இந்திய பேருந்து மற்றும் கார் ஆபரேட்டர்கள் கூட்டமைப்பு சார்பில் பொதுபோக்குவரத்து துறையில், தனியார் போக்குவரத்து நிறுவனங்களின் பங்களிப்பை மேம்படுத்த ஜூலை 9, 10, 11ம் தேதிகளில் கண்காட்சி நடக்கிறது. இந்த துறையில் இருக்கும், முன்னணி நிறுவனங்களின் 200க்கும் மேற்பட்ட அரங்குகளில், அதிநவீன பேருந்துகள், டாக்சிகள், மின்சார வாகனங்களில் புதிய தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவை இடம் பெறும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement