15 வயது சிறுமிக்கு கொடூரம்; போதை கும்பல் கூட்டு பலாத்காரம்

17

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே, பள்ளி மாணவி, கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, போதை கும்பலை சேர்ந்த மூவரை பிடித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த, 15 வயது மாணவி, பிளஸ் 1 படிக்கிறார். ஏப். 19ம் தேதி, செய்யாறு அடுத்த ஒரு கிராமத்திலுள்ள தன் பாட்டி வீட்டிற்கு வந்தார்.

அங்கு, உறவினரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு, அன்றிரவு, 8:00 மணியளவில் ஊர் திரும்ப, மொபட்டில் சென்று கொண்டிருந்தார். காஞ்சிபுரம் செல்லும் சாலையில், அவரை பின் தொடர்ந்து வந்த ஒரு கும்பல், மாணவியை வழிமறித்து நிறுத்தியது.

மாணவியை மிரட்டி, அருகிலுள்ள மாந்தோப்பிற்கு துாக்கி சென்று, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து விட்டு ஓடினர். பாதிக்கப்பட்ட மாணவி, மீண்டும் கிராமத்திலுள்ள பாட்டி வீட்டிற்கு சென்று, நடந்தவற்றை கூறினார்.

இந்த கொடூர வன்முறையில், உடல்நிலை பாதிக்கப்பட்ட அவரை, 20ம் தேதி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்தனர். காஞ்சிபுரம் போலீசார், மாணவியிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

அவர் கூறியுள்ள தகவல் அடிப்படையில், கூட்டு பலாத்காரம் என முடிவு செய்த போலீசார், விசாரணையை துவக்கி உள்ளனர். மாணவியின் வாக்குமூலத்தை வெளியிட போலீசார் மறுத்துவிட்டனர். தேர்தல் நேரம் என்பதால் பதற்றம் ஏற்படும் எனக்கூறி, குற்றவாளிகள் குறித்த விபரங்களையும் போலீசார் மறைத்தனர்.

இதற்கிடையே, பிரம்மதேசம் போலீசார் நேற்று வழக்கு பதிந்து, அப்பகுதி, 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, விசாரணை நடத்தி, மூன்று பேரை பிடித்துள்ளனர். அவர்களிடம், திருவண்ணாமலை எஸ்.பி. சுதாகர், கூடுதல் எஸ்.பி. சதீஷ்குமார், பிரம்மதேசம் போலீசார் மற்றும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

மாணவி பலாத்கார சம்பவத்தால், குறிப்பிட்ட கிராமத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், கிராமம் முழுதும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால், கிராமமே ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது போல், பதற்றமான நிலையில் காணப்பட்டது.

மாநிலத்துக்கு ஜெ., சேர்த்த பெருமை காற்றில் கரைந்து விட்டதே



திருவண்ணாமலை மாவட்டத்தில், சிறுமிக்கு நடந்த கொடூர செயலுக்கு, அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

@block_B@ இருண்ட காலத்தில் தமிழகம்

தமிழக பா.ஜ. முன்னாள் தலைவர் அண்ணாமலை: செய்யாறு அருகே, 15 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற கொடூரங்கள் மீண்டும், மீண்டும் நடப்பது, தி.மு.க. அரசின் சட்டம் ஒழுங்கு தோல்விக்கு முழு சாட்சி. ஐந்து ஆண்டுகளில், கட்டுக்கடங்காத போதைப்பொருள் புழக்கம், சட்டத்தின் மீதோ, காவல் துறை மீதோ, குற்றவாளிகளுக்கு எந்த அச்சமும் இல்லாத நிலை என, தமிழகம் ஒரு இருண்ட நிலைக்கு போய் விட்டது.

இவற்றை சரிசெய்து, தமிழகத்தை மீட்டெடுக்கவே, சில காலம் தேவைப்படும். இத்தகைய மோசமான சூழலில், தி.மு.க. ஆட்சி, தமிழகத்தை தள்ளி இருக்கிறது. தொடர்புடைய அனைவரையும் உடனே கைது செய்து, கடுமையான தண்டனை வழங்க வேண்டும். சிறுமிக்கும், குடும்பத்தினருக்கும் முழு பாதுகாப்பும், மனநல ஆலோசனைகளும் வழங்கப்பட வேண்டும்.block_B

@block_Y@5 ஆண்டுகளில் 62,489 வன்கொடுமை

பா.ம.க., தலைவர் அன்புமணி: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே, 15 வயது சிறுமி, எட்டு மனித மிருகங்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது, அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. கஞ்சா போதையை கட்டவிழ்த்து விட்டு, ஆட்சி அதிகாரத்தின் கடைசி நாளில் கூட பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாக்க துப்பில்லாத அரசாக, தி.மு.க., அரசு திகழ்வது கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில், கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு, தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், பாலியல் கொடுமைகளும் அதிகரித்துள்ளன. ஐந்தாண்டுகளில் மட்டும், குழந்தைகளுக்கு எதிராக, 62,489 பாலியல் வன்கொடுமை குற்றங்கள் நடந்துள்ளன. தி.மு.க., அரசு தொடர்ந்தால், இக்கொடுமைகள் தொடரும். தேர்தலில் தி.மு.க.,வை மக்கள் தோற்கடிக்க வேண்டும்.block_Y

@block_P@தி.மு.க.,வின் அலட்சியம்

அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: ஐந்தாண்டு கால தி.மு.க., ஆட்சியில் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோரும், போதை பொருள் விற்பனையில் ஈடுபடுவோரும், சரித்திர பதிவேடு குற்றவாளிகளும் சுதந்திரமாக சுற்றி திரிகின்றனர். இதனால், தமிழகத்தில், பச்சிளம் குழந்தைகள் தொடங்கி, அனைத்து தரப்பு பெண்களின் பாதுகாப்பும் கேள்விக் குறியாகி உள்ளது.

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவோ, அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், 'வெல்லும் தமிழ் பெண்கள்' எனும் நிகழ்ச்சியை நடத்தி, தமிழக மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்த தி.மு.க.,வின் அலட்சியத்தை, அடுத்தடுத்து அரங்கேறும் இது போன்ற பாலியல் வன்கொடுமை சம்பவங்களே தோலுரித்து காட்டுகின்றன.

ஜெயலலிதா ஆட்சியில், இந்தியாவிலேயே அதிகளவில் பெண்கள் வேலைக்கு செல்லும் மாநிலம் என்ற பெருமையை பெற்ற தமிழகம், தி.மு.க., ஆட்சியில், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகம் நடக்கும் மாநிலமாக மாறியிருக்கிறது.block_P

Advertisement