திருத்தணி முருகன் கோவிலில் பிரம்மோத்சவம் துவங்கியது
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத பிரம்மோத்சவம் விமரிசையாக நடந்து வருகிறது. அந்த வகையில், நேற்று காலை 6:30 மணிக்கு, நடப்பாண்டிற்கான சித்திரை பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
நேற்று முன்தினம் இரவு விநாயகர் வீதியுலா மற்றும் யாகசாலை பூஜையுடன் துவங்கப்பட்டது. நேற்று இரவு 7:00 மணிக்கு உற்சவர் கேடய வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.வரும் 27ம் தேதி தேர் திருவிழா, வரும் 28ம் தேதி தெய்வானை திருக்கல்யாணம், 30ம் தேதி தீர்த்தவாரி சண்முக சுவாமி உத்சவத்துடன் பிரம்மோத்சவ விழா நிறைவுபெறுகிறது.
இன்று முதல், வரும் 28ம் தேதி வரை காலை மற்றும் இரவு நேரத்தில் உற்சவர் முருகன், வள்ளி, தெய்வானையுடன் சூர்ய பிரபை, பூதம், சிம்மம், ஆட்டுக்கிடாய், பல்லக்கு, அன்னம், வெள்ளிமயில் வாகனம், புலி, யானை உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
மேலும்
-
'புதுச்சேரி - தமிழகத்தில் காங்கிரஸ் இரட்டை இலக்கத்தை தொடாது'
-
தேர்தல் கமிஷனில் பொற்கொடி முறையீடு
-
தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு துவக்கம்; ஓட்டளிக்க மக்கள் ஆர்வம்
-
திரு.வி.க., நகரில் ரவுடிகள் வலம்; தி.மு.க., வேட்பாளர் அலறல்
-
'பென்சில், பேனா, நோட்புக்' தொகுப்புடன் 'பூத்' கமிட்டியினருக்கு தலா ரூ.2,000
-
நா.த.க., மீது தேர்தல் விதிமீறல் வழக்கு