உங்கள் ஓட்டுச்சாவடி, பாகம் எண் வரிசை எண்ணை அறிவது எப்படி?

* நீங்கள் ஓட்டளிக்க வேண்டிய ஓட்டுச்சாவடி, உங்கள் பாகம் எண், வரிசை எண்ணை https://electoralsearch.eci.gov.in, ecinet.eci.gov.in, voters.eci.gov.net என்ற இணைய தளங்கள் மூலம் அறியலாம். ECINET, Votershelpline, Sweetha மொபைல் ஆப் மூலமும் அறிந்து கொள்ள முடியும். இதற்கு உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண் அவசியம்.

* ஓட்டுப்பதிவுக்கு செல்லும்போது வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, வங்கி அல்லது தபால் நிலையம் வழங்கியுள்ள போட்டோவுடன் கூடிய கணக்குப்புத்தகம், ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, பாஸ்போர்ட் உட்பட 12 அடையாள ஆவணங்களில் எதாவது ஒன்றை அவசியம் எடுத்துச்செல்லவும்.

Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News

இந்த தேர்தலில் இவையெல்லம் புதுமை



* ஓட்டுச் சாவடிக்குள் அலைபேசி கொண்டு செல்ல தடை உள்ளது. ஓட்டுச்சாவடிகளில் இதற்கென தனி அறை ஏற்படுத்தப்பட்டு, அலைபேசிக்கு டோக்கன் வழங்கப்படுகிறது. ஓட்டுப்பதிவு முடிந்தபின் டோக்கனை கொடுத்து அலைபேசியை திரும்பப் பெற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

* ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முன்பு வேட்பாளர் போட்டோ, பெயர் அதற்கு எதிரே அவருக்கான சின்னம் இடம் பெற்றிருக்கும். இம்முறை வேட்பாளர் பெயர் அருகே அவரது கலர் போட்டோவும் இடம் பெற்றிருக்கும்.

* தேர்தல் பணியாற்றும் ஊழியர்கள் ஓட்டளிக்க தபால் ஓட்டு வசதி உள்ளது. அதேபோல இந்தத் தேர்தலில் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் மின்வாரியம், போக்குவரத்துத்துறை, தீயணைப்புத் துறை, ஆம்புலன்ஸ், சுகாதாரம், குடிநீர் வழங்கல் துறைகளை சேர்ந்தவர்களும் தபால் ஓட்டளித்துள்ளனர்.

* ஓட்டளிக்கச் செல்வோருக்கு பூத் ஸ்லிப் என்ற வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. இதில் கியூ ஆர் கோடு வசதி உள்ளது. இதைப் பயன்படுத்தி தங்கள் ஓட்டுச்சாவடி, பாகம் எண், வரிசை எண் போன்றவற்றையும் அறிந்து கொள்ள முடியும். பூத் சிலிப் பெறாதவர்கள் பாகம் எண், வரிசை எண்ணை இணையதளங்கள் மூலம் அறிந்து கொண்டு, ஒரு பேப்பரில் எழுதி வைத்துக்கொண்டு ஓட்டுச்சாவடிக்கு கொண்டு செல்லலாம்.

Advertisement